உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

77

35

அக்காலத்து முறைப்படி எழுதப்பட்டிருக்கின்றது. இதற்குப் பொருள் இல்லை. வேண்பள்ளி அல்லது வெண்பள்ளி ஓர் ஊரின் பெயர். அறுவை என்பது துணிக்குப் பெயர். இச் சொல் சங்க காலத்தில் வழங்கப் பட்டது. அறுவை வாணிகன் என்பது துணி வாணிகன். (இளவேட்டனார் என்னும் புலவர் மதுரையில் அறுவை வாணிகம் செய்தவர். அவர் பாடிய பாடல்கள் சங்கத் தொகை நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன). ‘எளஅ' என்பது எளைய என்பது. இளைய என்னும் சொல் எளய என்று கொச்சையாக எழுதப்பட்டுள்ளது. அடன் என்பது வாணிகனுடைய பெயர். எளய அடன் என்பது இவருடைய முழுப்பெயர். அடன் என்பது ஆட்டன் என்னும் பெயர். இது கொச்சையாக அடன் என்று எழுதப்பட்டுள்ளது. ‘ஆட்டன் அத்தி' என்னும் பெயர் சங்க காலத்தில் வழங்கி வந்தது. இளம் ஆட்டன் என்பது ஆட்டனுடைய தம்பி என்னும் பொருளில் வழங்கிற்று. இளங்கண்ணன், இளநாகன், இளங்கௌசிகன், இளவேட்டன், இளங்கடுங்கோ, இளஎயினி, இளங்குட்டுவன் முதலான பெயர்களைக் காண்க.

வெண்பள்ளி ஊரில் இருந்த அறுவை வாணிகனான இள ஆட்டன் இந்தக் குகையில் கற்படுக்கை அமைக்கும் செலவுக்காகப் பொன் கொடுத்தான். அந்தப் பொன்னின் மதிப்பு இந்தப் பெயரின் இறுதியில் ஒரு குறியினால் காட்டப்பட்டுள்ளது.

1.

அடிக் குறிப்புகள்

1st All India Oriental Conference 1919.

2. Proceedings and Transaction of the 10th All India Oriental Conference, Tirupati 1940, New Indian Antiquary Vol. page 362 - 76.

3. P. 240 - 41 Early South Indian Palaeography.

4.

P. 63 Seminar on Inscriptions 1966.

5. Proceedings of the All India Oriental Conference 1919.

6. New Indian Antiquary Vol. I.

7. P. 241. Early South Indian Palaeography.

8. First All India Oriental Conference 1919.

9.

New Indian Antiquary Vol. I.

10. P. 241. Early South Indian Palaeography.