உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

வழக்கம். முக்கோண வடிவம் வட்டவடிமாக மாறிப் போய் இப்படியும் எழுதப்பட்டது. இதன் உட்பக்கத்தில் உள்ள புள்ளி, இது குற்றெழுத்து என்பதைத் தெரிவிக்கின்றது. ‘எகர ஒகர மெய்புள்ளி பெறும்’ என்பது தமிழ் எழுத்திலக்கணம். எகர ஒகர எழுத்திலும் மெய் எழுத்திலும் புள்ளியிடவேண்டும் என்பது இந்த நூற்பாவின் கருத்து. புள்ளியிடாமற்போனால் ஏ என்றும் ஓ என்றும் வாசிக்க வேண்டும். மெய் எழுத்துக்களின்மேல் புள்ளி இடாவிட்டால் அவை உயிர்மெய் எழுத்தாகப் படிக்கப்படும். இந்த எகர எழுத்தில் புள்ளியிட்டிருப்ப தனால் இது எ (குறில்) என்பது தெரிகிறது. புகழியூர் கல்வெட்டு ஒன்றில் இதுபோன்று வட்ட வடிவமும் நடுவில் புள்ளி பெற்றதுமான எகர எழுத்து காணப்படுவதை முன்பு கண்டோம்.

இந்தத் தமிழ்நாட்டுக் காசுகளில் பிராமி எழுத்து எழுதப்பட்டிருப்பது போலவே சாதவாகன அரசருடைய நாணயங்களில் பிராமி எழுத்து எழுதப்பட்டிருப்பதை இந்நூலில் வேறு இடத்தில் காண்க.

அடிக்குறிப்புகள்

1. First finds of Sangam age Coins. The Sunday Standard 16-7-1967