உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

88

கணி நந்தா ஸிரியற்கு

வெள்ளறை நிகமத்து

காவிதி காழிதி ஆந்தைய

ஸுதன் பிணாவு கொடுபித்தான்!

விளக்கம் : கணி நந்தாசிரியர் என்பது முன் இரண்டு கல்வெட்டுக்களில் கூறப்படுகிறது. கணி நதி ஆசிரியர் ஆகும். வ் என்பது தேவையற்ற எழுத்து. அதை ‘வெள் அறை' என்பதோடு சேர்த்துப் படிக்கலாம். வெள் அறை - வெள்ளறை என்று சேர்த்துப் படிக்கலாம். வெள்ளறை என்னும் ஐகார ஈற்றுச் சொல்லுடன் யகர மெய் சேர்த்து எழுதுவது அக்காலத்து முறை. நிகமம் என்பது நியமம். இச்சொல், தெரு என்னும் பொருளில் சங்க காலத்தில் வழங்கப்பட்டது. 'கருங்கட் கோசர் நியமமாயினும்' (அகநா. 90 : 12) நியமம் என்பதற்குக் கோயில் என்னும் பொருள் உண்டு. இக் கல்வெட்டுக் கூறுகிற 'வெள்ளறை நிகமம்' என்பது ‘வெள்ளறை நியம்' அஃதாவது வெள்ளறையூரின் அங்காடித் தெரு என்று பொருள் உள்ளது. காவிதி என்பது அரசனால் கொடுக்கப்படும் பட்டப் பெயர். காழிதி ஆந்தை என்பது காவிதி பட்டம் பெற்றவருடைய பெயர். ஆந்தை என்னும் பெயர் சில பிராமிக் கல்வெட்டுக்களில் அந்தை என்று எழுதப்பட்டுள்ளது. ‘ஆந்தைய’ என்பதன் பொருள் ஆந்தையினுடைய என்பது, அ என்னும் வேற்றுமை உருபு உடைய என்னும் பொருள் உள்ளது. ஸுதன் என்பது வடமொழிச் சொல். மகன் என்னும் பொருள் உள்ளது. பிணா, அல்லது பிணாவு என்பது பின்னப் பட்டது, முடையப் பட்டது என்னும் பொருள் உள்ளது. அல்லது சாமரையைக் குறிக்கிறதா? பிணாவு என்பதன் சரியான பொருள் தெரியவில்லை? கற்படுக்கைகளைக் குறிப்பதாகவும் இருக்கலாம்.

வெள்ளறை யங்காடித் தெருவில் வசிக்கிற காவிதி காழிதி ஆந்தையினுடைய மகன் கணிநந்தாசிரியற்கு 'பிணாவு' கொடுப்பித் தான் என்பது இதன் கருத்தாகும்.

அரிட்டாபட்டி 5

அரிட்டாபட்டியில் உள்ள இன்னொரு பிராமி எழுத்துக்

கல்வெட்டு இது: