உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. இளங்கோ அடிகளின் கவிதை நயம்*

காவியப் புலவர்களின் கவித்திறன் அவர்களுடைய காவியங் களிலே நன்கு புலனாகின்றன. அவர்களுடைய புலமையினால் அவர்களுடைய காவியங்கள் படிப்பவரின் மனத்தை அள்ளிக் கொள்கின்றன. உவமைகளையும் கற்பனைகளையும் கையாள்வதோடு சந்தர்ப்பத்துக் கேற்றபடி கவிதைகளை இனிமையாகவும் அழகாகவும் அமைக்கும் ஆற்றல் காவியப் புலவர்களுக்கு உண்டு. அதனாலே தான் அவர்களுடைய காவியங்கள் கற்பவர் மனத்தை ஈர்த்துத் தம் வயப்படுத்துகின்றன. காவியப் புலவர்களின் கனிந்த செய்யுட்கள் அவற்றைக் கற்பவருக்குத் தெவிட்டுவதில்லை. எத்தனை தடவை படித்தாலும் அந்தச் செய்யுட்கள் உள்ளத்தைக் கவர்ந்து மனத்தைக் கவர்ந்து மனத்துக்கு மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அளிக்கின்றன.

தமிழிலே ஆதிகாவியத்தை அளித்த இளங்கோ அடிகள் தலை சிறந்த காவியப் புலவர். அவர் இயற்றிய சிலப்பதிகாரம் அமரகாவியம். இதனாலன்றோ தேசிய கவி பாரதியார், 'நெஞ்சையள்ளும் சிலப்பதி காரக் காவியத்தைப் படித்த அறிஞர்கள் எல்லோரும் இதனைப் புகழ்ந்து பேசுகிறார்கள். சிலப்பதிகாரம் உலகக் காவியங்களில் ஒன்று என்பதில் தடைஇல்லை.

சிலப்பதிகாரக் காவியத்திலிருந்து இளங்கோ அடிகளின் கவிதைகள் ஒரு சிலவற்றை இங்குக் காட்டுவோம்.

மதுரையில் கோவலன் மேல் சுமத்தப்பட்ட வீண்பழியை, அவன் பொற்சிலம்பைக் களவாடினான் என்னும் கறையைப் போக்கி அவன் அப்பழக்கற்றவன் என்பதை நிலை நாட்டவேண்டிய பொறுப்பும் கடமையும் கண்ணகிக்கு ஏற்பட்டது. கண்ணகி, வழக்கு மன்றத்திலே சென்று தன் கணவன் குற்ற செம்மல், அவன் மீது பொய்யாகப் பழி சுமத்தப்பட்டது என்பதைப் பாண்டியனுக்கும் உலகத்தாருக்கும் நிரூபித்துக் காட்டினாள். தன் கணவன் மேல் சுமத்தப்பட்ட இழிந்த பழியைப் போக்கி, அவன் தூய்மையான பெருமகன் என்பதை உலகத்துக்குக் காட்டிய பிறகு, கண்ணகி தன் கணவனுக்குச் செய்ய தமிழ்வட்டம். இரண்டாம் ஆண்டு மலர். 1969.