உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

நான்கு பெண்மணிகள்

107

இவர்களில் ஒருத்தி காவற்பெண்டு என்பவள். இவள் கண்ணகி யின் தந்தையான மாசாத்துவனின் மாளிகையில் நெருக்கமாக ஊழியம் செய்து கொண்டிருந்தவன்; கண்ணகியைக் குழந்தைப் பருவத்தி லிருந்து சீராட்டிப் பாராட்டி வளர்த்த செவிலித்தாய், இவளுக்கு வயது ஐம்பதுக்குமேலிருக்கும். தன்னால் வளர்க்கப்பட்ட கண்ணகியிடத்தில் இவளுக்குப் பற்றும் பாசமும் இருக்கத்தானே செய்யும்?

கு

மற்றொரு பெண்மணி அடித்தோழி என்பவள். இவள் கோவலன் கண்ணகியர் வாழ்ந்திருந்த மாளிகையில் கண்ணகிக்கு ஊழியப் பெண்ணாக இருந்தவள். ஊழியக் காரியாகக் கண்ணகியுடன் நெடுங் காலம் பழகிய இவளுக்குப் பத்தினிக் கோட்டம் செல்ல யுண்டாயிற்று. இவளுக்கு ஏறத்தாழ முப்பது வயதிருக்கலாம்.

மற்றொரு பெண்மணி தேவந்தி என்பவள். இவள் கண்ணகியின் தோழி. காவிரிப்பூம்பட்டினத்தில் இவள் கண்ணகியுடன் பலகாலம் நெருங்கிப் பழகியவள். தன் தோழியின் பத்தினிக் கோட்டத்துக்குப் போக இவளும் ஆசை கொண்டாள்.

இந்த மூன்று பெண்மகளிரும் காவிரிப் பூம்பட்டினத் திலிருந்து ஒன்று சேர்ந்து புறப்பட்டுப் பத்தினிக் கோட்டத்துக்கு வந்தார்கள். பூம்பு காரிலிருந்து மதுரைக்கு வந்து அங்கிருந்துசேரநாட்டு வஞ்சிமா நகரத்துக்கு வந்தனர். அக்காலத்தில் வஞ்சிமா நகரத்துக்குப் போகச் செவ்வையான வழி இதுதான். மேலும் கண்ணகியும் கோவலனும் மதுரையில் மாதரியின் இல்லத்தில் தங்கியிருந்தபோது அங்கு நடந்தவைகளை நேரில் கேட்டறிய வேண்டும் என்னும் எண்ணமும் இவர்களுக்கு இருந்தது. பூம்புகாரிலிருந்து புறப்பட்ட இவர்கள் கால் நடையாக நடந்து மதுரைக்குச் செல்ல ஏறத்தாழ ஒரு மாதம் சென்றது.

மதுரைக்கு வந்த இவர்கள் வழிகேட்டுக கொண்டு மாதரியின் வீட்டையடைந்தனர். மாதரி வீட்டில் இல்லை. அவள் மகள் ஐயை என்னும் கன்னிப் பெண்மட்டும் அவ்வீட்டில் இருந்தாள். அவளுடைய தாயான மாதரி, கோவலன் கொலையுண்டு இறந்த துக்கந் தாங்க முடியாமலும், பாண்டியன் இறந்து போன திடுக்கிடும் செய்தியறிந்த படியாலும் அரண்மனை தீப்பற்றி எரிந்தபோது அவள் அத்தீயில் விழுந்து மாய்ந்துபோனாள். இவர்கள் இச்செய்தியைக் கேட்டுப்