உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

109

விழாவில் நம்முடைய நான்கு பெண்மணிகளும் கலந்து கொண்டு சிரத்தையோடு கண்டு மகிழ்ந்தார்கள். கண்ணகி வழிபாட்டில் இவர்கள் கொண்ட சிரத்தையும் அக்கறையும் அங்கிருந்தவரின் கருத்தைக் கவர்ந்தன. சோழ நாட்டுக்கு அப்பாலிருந்து ஆண் மக்கள் துணை யில்லாமல் வந்து சிரத்தையோடு வழிபடுகிற இவர்கள் யார்? ஒரு வேளை பத்தினியாகிய கண்ணகியின் உறவினராக இருக்கக் கூடுமோ? இதுபற்றி அங்கிருந்த சிலர் இவர்களை விசாரித்தார்கள். அவர்களுக்கு இவர்கள் தாங்கள் யார் என்பதையும் கண்ணகிக்கும் தங்களுக்கும் உள்ள தொடர்பு இன்னதென்பதையும் கூறினார்கள். இது சாதாரணச் சிறு நிகழ்ச்சி. இதைக் காவியப்புலவரான இளங்கோ வடிகள் இனிய சுவையுள்ள கவிதையாகச் சிலப்பதிகாரக் காவியத்தில் அமைத்திருக்கிறார். இச்செய்யுள்களைப் படியுங்கள்:

தேவந்தி சொன்னதாக இளங்கோவடிகள் கவிதையாகக்

கூறுகிறார்:

"முடிமன்னர் மூவருங் காத்தோம்பும் தெய்வ வடபே ரிமய மலையிற் பிறந்து

கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த

தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர் சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்.

காவற் பெண்டு கூறியதைச் செய்யுளாக அமைக்கிறார்: "மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் காதற் கணவன் கைப்பற்றிக் குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த தடம்பெருங் கண்ணிக்குத் தாயர்நான் கண்டீர் தண்புகார்ப் பாவைக்குத் தாயர்நான் கண்டீர்.

அடித்தோழி கூறியதைக் கவிதையாக வடிக்கிறார்: "தற்பயந்தாட் கில்லைத் தன்னைப் புறங்காத்த எற்பயந் தாட்கும் எனக்கும்ஓர் சொல்லில்லைக் கற்புக் கடம்பூண்டு காதலன் பின்போந்த பொற்றொடி நங்கைக்குத் தோழிநான் கண்டீர் பூம்புகார்ப் பாவைக்குத் தோழிநான் கண்டீர்.

99