உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

“மாமுது கணிகையர் மாதவி மகட்கு

நாம நல்லுரை நாட்டுதும் என்று

தாமின் புறூஉம் தகைமொழி கேட்டடாங்(கு) இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல் உடைகலப் பட்ட எங்கோன் முன்னாள் புண்ணிய தானம் புரிந்தோன் ஆகலின் நண்ணுவழி யின்றி நாள்சில நீந்த 'இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் வந்தேன், அஞ்சல் மணிமே கலையான். உன்பெருந் தானத் துறுதி ஒழியாது துன்பம் நீங்கித் துயர்க்கடல் ஒழி' கென விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென அணிமே கலையார் ஆயிரங் கணிகையர் ‘மணிமேக லை' என வாழ்த்திய ஞான்று.

(சிலம்பு: அடைக்கலக்காதை 25-39)

115

வணிகச் செல்வராகிய மாசாத்துவானும் மாநாய்கனும் கோவ லனுக்குக் கண்ணகியை மணஞ்செய்வித்துத் திருமண விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள். திருமணமான சில காலத்துக்குப் பிறகு கோவலனுடைய தாய், தன்னுடைய மகன் இல்வாழ்க்கையை இனிது நடத்திச் சிறப்பாக வாழ வேண்டும் என்னும் கருத்துடன் கண்ணகி யையும் கோவலனையும் தனித்து வாழ மனையறம்படுத்தினாள். சுற்றத் தாரைப் பேணுதல், விருந்தினரைப் போற்றுதல், துறந்தோரைக் காத்தல், இரந்தோர்க்கு அளித்தல் முதலிய மனையறத்தை நடத்தி வாழ்வாங்கு வாழ்வதைக் காண விரும்பினாள். தனி மாளிகையும் பொன்னும் பொருளுங் கொடுத்து ஏவலாளர் முதலிய பணியாளர்களையும் அளித்தாள். இதனைச் சிலம்பு,

"மறப்பருங் கேண்மையோடு அறப்பரி சாரமும்

விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும் வேறுபடு திருவின் வீறுபெறக் காண

வுரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க

என்று கூறுகிறது.