உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. இளங்கோவும் சாத்தனாரும்*

தமிழ் மொழியில் முதல் முதலாகத் தோன்றின ஆதிகாவியங்கள் இரண்டு. அவை இளங்கோவடிகள் செய்தசிலப்பதிகாரமும் சீத்தலைச் சாத்தனார் செய்த மணி மேகலையும் ஆகும். இவ்விரண்டு காவியங் களும் ஒரேகாலத்தில் தோன்றினபடியாலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் இவற்றின் தலைவர்களாக இருப்பதனாலும் இந்தக் காவியங்கள் இரட்டைக் காப்பியம் என்றும் கூறப்படுகின்றன. தென்னிந்திய திராவிட மொழிகளிலே தோன்றின ஏன்? அகில இந்திய திராவிட மொழி களிலே தோன்றின முதல் காப்பியங்கள் இவை. இந்தக் காவியங் களைச் செய்த இளங்கோவடிகளும் சீத்தலைச் சாத்தனாரும் சம காலத்தில் வாழ்ந்தவர் என்பது மட்டுமல்லாமல் இருவரும் உற்ற நண்பர்க ளாகவும் இருந்தார்கள். கடைச் சங்க காலத்தின் கடைசியில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்திருந்த இவ்விரு காவியப் புலவரும் திட்டமிட்டு முடிவுசெய்து இக்காவியங்களை எழுதினார்கள்.

ரு

சங்ககாலத்து மக்கட் பெயர்களில் அதிகமாக வழங்கின பெயர்கள் சாத்தன், கொற்றன் என்பவை. சாத்தன் - சாத்தி, கொற்றன் -கொற்றி என்னும் பெயர்கள் கடைச்சங்க காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெருக வழங்கி வந்தன. நம்முடைய சாத்தனார் பாண்டிய நாட்டிலே சீத்தலை என்னும் ஊரில் பிறத்படியால் சீத்தலைச் சாத்தனார் என்று பெயர் பெற்றார். சீத்தலை பாண்டி நாட்டில் எங்கிருந்தது என்பது தெரியவில்லை. வாழ்க்கையை நடத்துவதற்காக இவர் செய்து வந்த தொழில் கூல வாணிகம். கூல வாணிகம் என்றால் நவதானியக்கடை. கூல வாணிகத்தை இவர் பாண்டி நாட்டுத் தலைநகரமான மதுரையில் நடத்தி வந்தார். இக்காரணம் பற்றி இவர் மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று பெயர் பெற்றார்.

சாத்தனார் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். அவர் வாழ்ந்த கடைச் சங்க காலத்தில் பௌத்த மதம் ஓரளவு தமிழகத்தில் பரவியிருந்தது. பௌத்த மதம் அல்லாமல் சமண சமயமும் (சைன மதம்) தமிழகத்திலே ஓரளவு பரவியிருந்தது. கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் பாரத நாட்டை

மணிமேகலை மன்றம் விழாமலர். இராஜ பாளையம். 1976.