உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

இவ்வாறு இந்தப் பத்தினிச் செய்யுளைப்பற்றி இம்மூன்று அறிஞரும் கூறுகிறார்கள். இவர்களில் இராகவையங்கார், இப்பத்தினிச் செய்யுள் கண்ணகியார் பாடியது என்று கூறுகிறார். வையாபுரியாரும் நீலகண்டரும், இச்செய்யுள் கண்ணகியார் பாடியது அல்ல என்று கருதினாலும், இதில் கூறப்படுகிறவர்கள் கண்ணகியாரும் கோவலனும் என்று கருதுகிறார்க்ள. பிள்ளையவர்கள் இன்னும் ஒருபடி அதிகமாகச் சென்று கண்ணகி சரிதத்தைப்பற்றிய ஒரு நூலை, ஒரு புலவர் வெண்பா வினால் இயற்றி யிருந்தார் என்றும், அந் நூலின் ஒரு செய்யுள்தான் யாப்பருங்கல விருத்தியுரைகாரர் மேற்கோள் காட்டிய பத்தினிச் செய்யுள் என்றும் கூறுகிறார்.

இம் மூவரும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் அலுவல் புரிந்தவர்கள். இராகவையங்காரும் வையாபுரிப் பிள்ளையும் பல்கலைக் கழகத்தில் தமிழ் அகராதி வெளியீட்டில் அலுவல் செய்தவர்ககள். அகராதி அலுவல் முடிந்த பிறகு பிள்ளையவர்கள் பல்கலைக் கழகத்துத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். இதே பல்கலைக் கழகத்தில் சரித்திரத் துறைத் தலைவராக இருந்தவர் நீல கண்ட சாஸ்திரியார் இவர்கள் அடிக்கடி கலந்துபேசிக் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டவர்கள். ஆகையால் இவ்வாராய்ச்சியில் ஒரே விதமான கருத்தைக் கூறுகிறார்கள். பத்தினிச் செய்யுளைப்பற்றி இவர்கள் கொண்ட கருத்தை மேலே காட்டினோம். இனி, இவர்களின் ஆராய்ச்சியும் முடிவும் சரிதானா என்பதைப் பார்ப்போம்.

யாப்பருங்கல விருத்தியுரைகாரர் வெண்பாவை மேற்கோள் காட்டி இதனைப் பத்தினிச் செய்யுள் என்று கூறினர். பத்தினிப் என்ற பெயரைக் கண்டதும், இம்மூன்றுபேரும், பத்தினி என்பது கண்ணகி தான் என்று முடிவு செய்துவிட்டனர். பத்தினிச் செய்யுளைப் பாடியவர் கண்ணகியார் என்று அய்யங்கார் முடிவுசெய்துவிட்டார். பத்தினிச் செய்யுள், கோவலனையும் கண்ணகியையும் பற்றியது என்று பிள்ளை யவர்களும் சாஸ்திரியாரும் முடிவு செய்துவிட்டனர். கண்ணகியார் ஒருவர் மட்டுந்தானா பத்தினி? வேறு பத்தினிப் பெண்கள் தமிழ் நாட்டில் இருந்ததில்லையா? பத்தினிகளில் சிறந்தவர் மாபெரும் பத்தினி யாகிய கண்ணகியார் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால், கண்ணகியாருக்கு முன்னும் பின்னும் பத்தினியர் பலர் உள்ளனர். அந்தப் பத்தினிப் பெண்களில், பத்தினிச் செய்யுளைப் பாடியவர் எந்தப் பத்தினியோ? கண்ணகியார் தான் “பத்தினிச் செய்யுளை”ப் பாடினார்