உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

133

“இச் செய்யுள் பத்தினிச் செய்யுள் என வழங்குகிறபடியினாலே, பத்தினித் தெய்வமாகிய கண்ணகி வரலாற்றைப் பற்றியதென்றே கொள்ளத் தக்கது” என்று வையாபுரிப் பிள்ளையும், “இந்தச் செய்யுள் பத்தினிச் செய்யுள் என்று கூறப்படுகிறது. இதில் கண்ணகி கதையின் அடிப்படையான கருத்து உள்ளது என்பதில் ஐயமில்லை” என்று நீலகண்ட சாஸ்திரியார் எழுதியது முற்றிலும் தவறு என்பது மேலே காட்டிய காரணங்களினாலே நன்கு விளங்கும். பத்தினிச் செய்யுள் என்று பெயர் இருப்பதனாலேயே இந்தச் செய்யுள் எப்படி கண்ணகியின் வரலாறு ஆகும்? தமிழ் நாட்டிலே ஒரே ஒரு பத்தினிதான் உண்டா? கண்ணகிக்கு முன்னும் பின்னும் வேறு பத்தினிப் பெண்கள் இல்லையா? என்று மீண்டும் கேட்கிறாேம்.

66

இவள் வரலாறு ஒருபடியாக உருப்பெற்றகாலத்து, அவலச் சுவை மிகுந்த இப்பகுதியுடன் பிற கதைப் பகுதிகளையும் அமைத்து வெண்பாவினால் நூல் ஒன்று ஒரு கவிஞன் செய்திருந்தான் என்று கொள்ளலாம்" என்று வையாபுரிப் பிள்ளை எழுதியதும், “இதில் கண்ணகி கதையின் அடிப்படையான கருத்து உள்ளது என்பதில் ஐயமில்லை" என்று நீலகண்ட சாஸ்திரியார் எழுதியதும் பொருளற்ற வீண் கருத்தாகும். என்னை? பத்தினிச் செய்யுள் யாரோ ஒரு பத்தினியின் செய்யுளாயிருக்கும்போது, அச் செய்யுளிலிருந்து கண்ணகி வரலாறு தோன்றிற்று என்று கூறுவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிபோடுவது போலாகும்.

வையாபுரியாரும் நீலகண்டரும் இதனோடு நின்றார்களா? இல்லை. மேலும் மேலும் ஆகாயக்கோட்டையைக் கட்டிக்கொண்டு போகிறார்கள். மணிமேகலையையும் சிலப்பதிகாரத்தையும்

பிற்காலத்து நூல்கள் என்று நிலைநாட்டவேண்டும் என்னும் ஆவேசத்தினால் அறிவுக்கு ஒவ்வாத காரணத்தைக் காட்டுகிறார்கள். தொல்காப்பியம், சொல்லதிகாரம் 100-ஆம் சூத்திர உரையில் தெய்வச் சிலையார் என்னும் உரையாசிரியர் ஒரு செய்யுளை மேற்கோள் காட்டியுள்ளார். அச்செய்யுள் இது:

“காதலியைக் கொண்டு கவுந்தியொடு கூடி மாதரிக்குக் காட்டி மனையி னகன்றுபோய்க் கோதி யிறைவனது கூடற்கட் கோவலன்சென் றேத முறுதல் வினை.

99