உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

147

என்றும் சிலம்பு, கண்ணகியார் தங்கிய கானகத்தில் மலைமேல் இருந்த வேங்கை மரத்தைக் கூறுகிறது.

இவற்றிலிருந்து கண்ணகியார் நிழலுக்காக ஒதுங்கி நின்ற வேங்கை மரம் ஊருக்கு அப்பாலே காட்டின் மத்தியிலே மலையின் மேல் வளர்ந்திருந்த வேங்கை மரம் என்பது ஐயமில்லாமல் தெளி வாகத் தெரிகிறது. திருமாவுண்ணியார் இருந்த வேங்கை மரம் ஊருக்கு அரு கிலே வயலுக்கு மத்தியிலே பரண் கட்டப்பட்டிருந்த வேங்கை மரம் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கண்ணகியார் பாண்டி நாட்டு மதுரையிலிருந்து சேரநாட்டுக்குப் போகிறபோது காட்டு வழியிலே மலைமேலே இருந்த ஒரு வேங்கை மரத்தின் நிழலிலே சிறிதுநேரம் தங்கினார். அப்போது, பதினான்கு நாட்களாக உணவும் தண்ணீரும் அருந்தாமல் பட்டினி கிடந்து இளைத்துக் களைத்திருந்த அவர் அம்மரத்தின்கீழ் உயிர் நீத்தார் திருமாவுண்ணியார் வேங்கை மரத்தின் கீழ் உயிர் விடவில்லை.

திருமாவுண்ணியார் ஒரு கொங்கை அறுத்தது வேங்கை மரத்தண்டை. கண்ணகியார் கொங்கை யறுத்த இடம் வேங்கை மர நிழல் அன்று; மதுரை மாநகரம்.

கண்ணகியார், நெடுந்தூரம் வழி நடந்த களைப்பினாலும் உணவு கொள்ளாமல் பட்டினி கிடந்த இளைப்பினாலும் வேங்கை மரத்தின் நிழலில் தங்கினார். திருமாவுண்ணியார், தினைப்புனத்தைக் காவல் காப்பதற்காக வேங்கை மரத்தின் பரண்மேல் தங்கினார்.

கண்ணகியார் வேங்கை மரத்தின்கீழே தங்கியிருந்தபோது ஏதிலர் யாராலும் துன்புறுத்தப்பட வில்லை. அதற்கு மாறாக, அவருக்குக் குறமகளிர் அன்புள்ள துணைவராக இருந்தனர். கண்ணகியார் வேங்கை மரத்தின்கீழே உயிர் நீத்தார். திருமாவுண்ணியார், வேங்கை மரத்தில் இருந்தபோது ஏதிலாளன் ஒருவனால் துன்பம் அடைந்தார். ஆனால், அவர் வேங்கை மரத் தண்டை உயிர்விடவில்லை.

கண்ணகியார் வழியிலிருந்த வேங்கை மரத்தடியில் சிறிது நேரந்தான் தங்கினார். திருமாவுண்ணியார் வேங்கை மரத்தின் மேல் பல நாட்கள் தங்கியிருந்தார். எனவே, கண்ணகியார் தங்கிய கான வேங்கை மரம் வேறு; திருமாவுண்ணியார் தங்கிய கழனி வேங்கை மரம் வேறு. அஃது இருந்த இடம் வேறு, இஃது இருந்த இடம் வேறு. இவற்றை யறியாமல் வையாபுரிப்பிள்ளை முதலிய அறிஞர்கள்,