உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

149

ஆகவே, திருமாவுண்ணிக்கும் கண்ணகிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இருவரும் வெவ்வேறு மகளிர் ஆவர்.

வேங்கை மரத்தின்மேல் பரண் அமைத்துக்கொண்டிருந்த பெண்கள் கணக்கற்ற பேர் உண்டு. அவர்கள் எல்லோரும் திருமா வுண்ணிகள் அல்லர்.வேங்கைமர நிழலில் தங்கிய பெண்கள் எல்லோரும் கண்ணகியர் அல்லர். முலை குறைத்தவர் பல பெண்கள் உள்ளனர். அவர்கள் எல்லோரும் திருமாவுண்ணிகளும் கண்ணகி களும் அல்லர்.

திருமாவுண்ணியுடன் கண்ணகியை இணைத்துப் பிணைப்பது போலவே, பேகன் என்னும் வள்ளலின் மனைவியாகிய கண்ணகியைக் கோவலன் மனைவியாகிய கண்ணகியுடன் இணைத்துப் பிணைத்து முடி போடுகிறார் வையாபுரிப்பிள்ளை. கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகன் என்னும் வள்ளல் தன் மனைவி கண்ணகியைப் புறக்கணித்து வேறொருத்தியுடன் வாழ்ந்ததாகப் புறநானூற்றி லிருந்து அறிகிறோம். கண்ணகி என்ற பெயரைக் கண்டவுடன் வையாபுரிப் பிள்ளை, அந்தக் கண்ணகியைக் கோவலன் கண்ணகியுடன் முடிபோடுகிறார். (இலக்கிய மணி மாலை பக்கம் 146) கண்ணகி என்னும் பெயர் கோவலன் மனைவிக்குமட்டுந்தான் வழங்கியதாக இவர் கருதுகிறார் போலும்! வையாபுரி என்னும் பெயர் இவருக்கு மட்டுந் தானா உரியது? கண்ணகி என்னும் பெயர் சங்க காலத்தில் ஒருத்திக்கு மட்டுந்தானா வழங்கியிருக்கும்?

கண்ணகி என்னும் பெயர் கண்ணழகி என்பதன் திரிபு. பெண்களின் கண் உறுப்பைச் சிறப்பித்துப் பெயர் இடுவது தொன்றுதொட்டு இன்று வரையும் உள்ள மரபு. கண்ணம்மாள் என்னும் பெயர் இன்றும் எத்தனையோ பெண்களுக்கு வழங்கப்படுகிறது. காமாட்சி, மீனாட்சி விசாலாட்சி, அஞ்சனாட்சி முதலிய கண்ணைச் சிறப்பித்துள்ள பெயர்களும் இன்றும் பெண்மணிகளுக்கு வழங்கப் படுகின்றன. அது போல, கண்ணகி (கண்ணழகி) என்னும் பெயரையும் அக்காலத்தில் பல பெண்மணிகளுக்கு வழங்கியிருப்பார்கள் அன்றோ? (நக்கண்ணி என்னும் பெயரும் அக்காலத்தில் வழங்கியது) ஆகவே, இதனை யறியாமல், வள்ளல் பேகனுடைய மனைவி கண்ணகியையும் கோவல னுடைய மனைவி கண்ணகியையும் ஒருவராகக் கூறுவது ஆராய்ச்சிக்கும் அறிவுக்கும் அனுபவத்துக்கும் பொருந்தாது. கண்ணகிகள் என்னும்