உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

23. அறவாழி அந்தணன்*

அறவாழி அந்தணன்தாள் சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.

இத்திருக்குறளில் கூறப்பட்ட அறவாழி அந்தணன் என்பவர் யாவர், அவர் எந்தக் கடவுள் என்பதை ஆராய்வோம். உரையாசிரியர் பரிமேலழகர், அறவாழி என்பதற்கு அறக்கடல் என்று பொருள் கூறினார். மற்றொரு பொருளையும் குறிக்கின்றார். அது: அறவாழி என்பதனைத் தரும சக்கரமாக்கி அதனையுடைய அந்தணர் என்று உரைப்பாருமுளர்" என்பது.

66

அந்தணன் என்று பொருள் கொள்வதைவிடத் தரும சக்கரத்தையுடைய அந்தணன் என்று பொருள் கொள்ள சிறப்புடையதாகத் தோன்றுகிறது. நூல்களிலே ஜைனருடைய அருகக் கடவுளும் பௌத்தருடைய புத்தர் பெருமானும் அறவாழியை உடையவர் என்று கூறப்படுகின்றனர். ஆகவே, அறவாழி அறவாழி அந்தணன் என்று குறிக்கப்பட்டவர் அருகக் கடவுளும் புத்தர் பெருமானும் எனக் கொள்ளத்தகும்.

ஆழிப்படையையுடைய திருமால் அறவாழி அந்தணர் அல்லரோ எனின், அல்லர். அவர் மறவாழியை யுடைவராகலின் அறவாழி அந்தணன் ஆகார். என்னை? திருமாலின் திருத்தொண்டர்க ளான ஆழ்வார்கள் எல்லோரும் அவரை அறவாழி அந்தணன் என்று கூறாமல் மறவாழி படையான் என்றே கூறியுள்ளனர். “அடலாழி ஏந்தி அசுவண்குலம் வேர் மருங் கறுத்தாய்” என்றும், “அமர்கெ என்றும், “காய்சின ஆழி” என்றும், “கொ ஆழி" என்றும், "கூர் ஆழி” என்றும், “கனலாழிப்புடையவன்" என்றும், “போராழி கொண்ட பிரான்” என்றும், “ஊன்திகழ் நேமி" என்றும், “ஈர்க்கின்ற சக்கரத் தெம்மான்” என்றும் திருமாலின் ஆழி (சக்கரம்) மறவாழி என்றே ஆழ்வார் கள் கூறியிருப்பதை அவர்கள் பாடல்களிலே நெடுகக் காணலாம். ஆகவே, அறவாழி அந்தணன் என்னும் பெயர் திருமாலுக்குப் பொருந்தாது.

  • மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சமயங்கள் வளர்த்த தமிழ் (1966) எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.