உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

'விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்

துண்ணின் றுடற்றும் பசி,

என்றும் திருவள்ளுவர் கூறினார். அன்றியும், தாவரங்கள் உண்டாக்கி அவற்றின் மூலம் உயிர்களுக்கு உணவை கொடுப்பது மட்டுமல்லாமல், உயிர்களுக்குத் தானே உணவாகவும் இருப்பது மழை (நீர்). இதனைத் திருவள்ளுவர்

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉ மழை

99

என்று அழகாகக் கூறினார்.

தொன்றுதொட்டு நமது நாட்டின் முக்கியத் தொழிலாக உள்ளது, நாட்டின் முதுகெலும்பு போன்றது உழவுத் தொழில். ஆகவே, நம்மவர் மழையின் இன்றியமையாமையை நன்கறிவர். ஆனால், மழை எப்படிப் பெய்கிறது என்பதைப் பண்டைப் பெரியோர் அறியார். நமது நாட்டில் மட்டுமல்ல; ஏனைய நாட்டிலும் பண்டைக் காலத்தில் இருந்தவர் மழை பெய்வதன் காரணத்தை அறிந்திலர். இந்திரன் என்னும் தெய்வம் மழையைப் பெய்யச் செய்கிறான் என்றும், வருணன் என்னும் கடல்தெய்வம் மழையை அனுப்புகிறது என்றும் அவர்கள் கருதிவந்தனர். வெண் மேகங்கள் சென்று கடலில் படிந்து வயிறு நிறைய நீரைக் குடித்துக் கருமேகமாகி வானத்திலே வந்து மழையாய் பெய்கிறது என்று காவியப் புலவர்கள் பாடிய பாடல்களிலே, வெயிலின் சூட்டினாலே நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாகச் சென்று ஆகாயத்திலே மேகமாகி மழையாகப் பெய்கிறது என்கிற 'சயன்ஸ்' என்னும் விஞ்ஞானத்தின் சாயல் காணப்பட்டாலும், அதை நம் முன்னோர் காவியப் புலவரின் கற்பனை என்று கருதினார்களே யல்லாமல் உண்மை என்று கொள்ளவில்லை.

நமது நாட்டுப் பண்டைப் பெரியோர் மழை எப்படிப் பெய்கிறது என்று கருதினார்கள் என்பதைப் பார்ப்போம். அரசரும், மகளிரும், முனிவரும் மழை பெய்வதற்கும் பெய்யாமல் இருப்பதற்கும் காரணம் ஆவர் என்று அவர்கள் கருதினார்கள். மகளிர் கற்புடன் இருந்தால் மழை பெய்யும்; கற்புத் தவறினால் மழை பெய்யாது என்றும், அரசர் செங்கோல் செலுத்தினால் மழை பெய்யும்; அரசர் கொடுங்கொல் செலுத்தினால் மழை பெய்யாது என்றும், துறவிகளாகிய முனிவர்