உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

219

தேடலாம் என்று கருதவேண்டா. பொருளை ஈட்டுவதற்கு நல்ல வழிகளும் உள்ளன; தீய வழிகளும் உள்ளன. ‘நல்லவை யெல்லாம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு’ ஆனால், தீய வழியில் பொருளைத் தேடாதே என்கிறார் திருவள்ளுவர். கள்ளத்தனம், திருட்டுப் புரட்டு, மோசநாசம் முதலிய தீய வழிகளால் தேடிய பணம் நன்மை பயக்காது. 'களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக்கெடும்.' ‘உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்,' 'அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் புல்லார் புரளவிடல்' ‘அஃகாமை செல்வத்திற்கு யாதெனின், வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்’ ‘அறன்ஈனும் இன்பமும்ஈனும் திறனறிந்து தீதின்றி’வந்த பொருள்' ஆகவே, நல்ல வழியில், அறநெறியில் ஈட்டுக பொருளை என்கிறார் திருவள்ளுவர்.

பொருள் ஈட்டுவதற்கு எத்துணையோ துறைகள் உள்ளன. விஞ் ஞானமும் நாகரிகமும் பெருகியுள்ள இந்த இருபதாம் நூற்றாண்டிலே, பொருள் ஈட்டுந்துறைகள் எண்ணிறந்தன என்றே கூறலாம். ஆனால் பொருள் ஈட்டுதற்குச் சிறந்ததும் முதன்மையானதும் ஆன துறை என்று திருவள்ளுவர் கருதுவது உழவுத் தொழிலையே. இஃது, அவர் காலத்துக்கு மட்டும் அன்று; இக்காலத்துக்கும் பொருந்தும். 'இலம் என்று அசைஇ' இருப்பாரைக் காணில் நிலம் என்னும் நல்லாள் நகும்’ என்கிறார். உழவின் சிறப்பை உழவு என்னும் அதிகாரத்தில் விளக்குகிறார். உழவுக்கு அடுத்தபடியாக, அதிகப்பொருள் வருவாய்க்குக் காரணமா யிருப்பது வாணிபம் என்று திருவள்ளுவர் கருதுகிறார். வாணிகத் துறை பலவாற்றானும் சிறப்புற்றுப் பெருகியுள்ள இக்காலத்தில், அதன் ஊதியத்தை நாம் கண்கூடாகக் காண்கிறோம். வாணிப முயற்சிதான் செல்வத்தை நிறையக் கொடுக்கிறது. ஆனால், அதிலும் அறவழியில் நின்று, கள்ள வாணிகம் இல்லாமல், செம்மை நெறியில் பொருள் ஈட்ட வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். 'வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின்' என்கிறார். இதனால், மற்றத்தொழில்கள் தாழ்ந்தவை என்று திருவள்ளுவர் கூறியதாகக் கருதவேண்டா. எந்தத் தொழிலாயினும் நன்றே. அறவழியில் பொருள் தேடவேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து.

பொருட்செல்வத்தின் சிறப்பைக்காட்டி, அதனை ஈட்டுக என்று வற்புறுத்திக்கூறி, நல்வழியில் பொருள் ஈட்டுக என்று அறவழி காட்டிய வள்ளுவர், ஊக்கத்தோடும மனவுறுதியுடனும் விடாமுயற்சியோடும்