உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

231

துறவிகளே! பெண்ணின் நெஞ்சைக் கவர்ந்து கொள்கிற ஆ ணின் குரல் போன்று வேறு குரலையும் காணவில்லை. ஆணின் குரல் பெண்ணின் மனத்தைக் கவர்ந்து விடுகிறது.

துறவிகளே! பெண்ணின் நெஞ்சைக் கவர்ந்து கொள்கிற ஆணின் மணம் போன்ற வேறு மணத்தைக் காணவில்லை. ஆணின் மணம் பெண்ணின் மனத்தைக் கவர்ந்து கொள்கிறது.

துறவிகளே! பெண்ணின் நெஞ்சைக் கவர்ந்து கொள்கிற ஆணின் சுவை போன்று வேறு சுவையைக் காணவில்லை. ஆணின் சுவை பெண்ணின் உள்ளத்தைக் கவர்ந்து கொள்கிறது.

துறவிகளே! பெண்ணின் மனத்தைக் கவர்ந்து கொள்கிற ஆணின் ஊறு உணர்ச்சியைப் போன்று வேறு உடலுணர்ச்சியைக் காணவில்லை. ஆணின் ஊறுணர்ச்சி பெண்ணின் நெஞ்சைக் கவர்ந்து கொள்கிறது. இவ்வாறு ஆண் பெண்களின் ஐம்புலக் கவர்ச்சிகளைப் பற்றி விளக்கிய பகவன் புத்தர் ஐம்புலன்களை அடக்க வேண்டும் என்று பிக்குகளுக்குக் கூறினார்.

இவ்வாறு ஆண் பெண்களுடைய ஐம்புல உணர்ச்சி ஒன்றை யொன்று ஈர்த்துக் கொள்வதை அங்குத்தரநிகாயத்தின் ஏக பாதம் முதல் அதிகாரத்தில் கூறுகிறது.

சங்க காலத்திலிருந்த திருவள்ளுவர் ஐம்புல இன்பத்தைப் பற்றிக் கூறியதை அவருக்கு முன்பு சில நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்திருந்த பகவன் புத்தர் விரிவாகக் கூறியுள்ளார். பகவன் புத்தர் கூறிய இந்தத் தெளிவுரை.

66

“கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள

என்னும் குறட்பாவுக்குச் சிறந்த உரையாக அமைந்திருக்கிறது. மேலும், காதலன் ஒருவன் தான் பெற்ற சிற்றின்பம் தன் காதலியிடம் அமைந்து இருந்தது போலத் திருவள்ளுவர் கூறியதை உடன்பட்டுக் கூறுகிற பகவன் புத்தர் காதலி ஒருத்தி தான் பெற்ற சிற்றின்பம் தன் காதலனிடம் அமைந்து கிடப்பது போலவும் கூறியிருப்பது மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.