உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

III

பூதத்தாழ்வார் பொய்கையாழ்வார் பேயாழ்வார் ஆகிய முதலாழ்வார் மூவர் காலத்திலே அவர்களோடு நண்பர்களாக இருந்தவர் திருமழிசையாழ்வார். ஆனால், இவர் மற்ற மூவரிலும் ஆண்டில் இளையவர். திருமழிசையாழ்வார் தாம் இயற்றிய நான்முகன் திருவந்தாதியில்,

66

66

'காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்

ஆப்பு அங்கொழியவும் பல்லுயிர்க்கும் - ஆக்கை கொடுத்தளித்த கோனே! குணப்பரனே! உன்னை விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்.

என்று பாடுகிறார். இதில் குணப்பரனே என்று வருவதால், குணப்பரன் என்னும் சிறப்புப் பெயருடைய மகேந்திரவர்மனை (முதலாவன்) இது குறிக்கிறது என்றும், ஆகவே திருமழிசையாழ்வார் மகேந்திர வர்மன் காலத்தவர் என்றும் சீநிவாச அய்யங்கார் அவர்கள் கூறுகிறார்.11 மு. இராகவையங்கார் அவர்களும் இதனை ஒருவாறு ஏற்றுக் கொள்கிறார். “ஆழ்வாரும் (திருமழிசையாழ்வாரும்) குணபரப்பெயரை வழங்கினர் என்பது ஏற்றுக் கொள்ளப்படின், அப் பெயர் கொண்ட மகேந்திரவர்மனது ஆட்சிக் காலத்தைத் (618-646) திருமழிசை யாழ்வாரது வாழ்நாளின் பிற்பகுதியாகக் கொள்ளலாம்" என்று அவர் எழுதுகிறார்.12 மேலும், இவற்றால், சமயவாதஞ் செறிந்து நிகழ்ந்த மகேந்திரவர்மனது ஆட்சிக்காலமே திருமழிசைப் பிரானுக்கும் உரியதென்று கொள்வது பெரிதும் பொருந்தும் என்னலாம். இதற்கேற்ப, குணபரன் என்ற பல்லவன் பெயரையே, பொருட்பேறு சிறத்தல் பற்றி அவ் வாழ்வார் திருமாலுக்கு வழங்கலாயினர் என்று மேற்கூறிய கருத்தும் ஏற்புடைத்தாயின், அப் பல்லவன் ஆட்சிபுரிந்த 7-ஆம் நூற்றாண்டின் தொடக்கமே, திருமழிசையாரது வாழ் நாளின் பிற்பகுதி யென்று துணியத் தடையில்லை. என்று கூறுகிறார். ஆழ்வார், குணப்பரனே என்று கூறியது குணபரன் என்னும் மகேந்திர வர்மனைத்தான் குறிக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், இவர்கள், இவ் வாழ்வாருக்கு முடிவு கட்டுகிற காலம் எமது ஆராய்ச்சிக்கு ஏறக்குறைய இணைந்து வருகிறது. இவர்கள், திருமழிசை யாழ்வார் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் கி.பி. 7- ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்கின்றனர். எமது ஆராய்ச்சியில்,

9913