உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

'நமண நந்தியும் கருமவீரனும்

தரும சேனனும் என்றிவர்

குமணமாமலைக் குன்றுபோல் நின்று

தங்கள் கூறை ஒன் றின்றியே

ஞமண ஞாஞண் ஞாண ஞோண மென் றோதி யாரையும் நாணிலா அமணராற் பழிப் புடைய ரோ நமக் கடிகளாகிய அடிகளே”.

257

(நமக்கடிகளாகிய அடிகள் 9)

இதில், சுந்தரர்மூர்த்தி சுவாமிகள் நந்திகணம், சேனகணம் முதலிய ஜைன சமயச் சங்கங்களின் பெயர்களையும், அச் சங்கங்களில் தலைமை பூண்டிருந்த ஜைன முனிவரின் பெயர்களையும் கூறுகிறார். மேலும் அவர்கள் ஓதிக்கொண்டிருந்த பிராகிருத மந்திரச் சொற்களை யும் கூறுகிறார். ஆனால், வையாபுரிப் பிள்ளை அவர்களோ, சமணரைப்பற்றி ஒரு குறிப்பும் சுந்தரர் தேவாரத்தில் இல்லை என்று எழுதுகிறார்!

66

மேலும் சுந்தரர் தேவாரத்தைப் பார்ப்போம்.

"நன்மையொன் றிலாத்தோர் புன்சமணாம்

66

66

66

சமயமாகிய தவத்தினார் அவத்தத் தன்மைவிட்டு”. (திருத்தினை நகர் 9)

'குண்டாடியும் சமணாடியும் குற்றுடுக்கையர் தாமும் கண்டார் கண்ட காரணம்மவை கருதாது கை தொழுமின் (திருமறைக்காடு 9)

'குண்டாடிய சமணாதர்கள் குடைச்சாக்கியர் அறியா மிண்டாடிய வதுசெய்தது வானால் வருவிதியே”.

(திருச்சுழியல் 9)

'குண்டரைக் கூறையின்றித் திரியும் சமண் சாக்கியப்பேய் மிண்டரைக் கண்டதன்மை விரவாகிய தென்னைகொலோ

(திருநாகேச்சரம் 10)

"மோடுடைய சமணர்க்கு முடையுடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த பீடுடைய புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே

(கோயில் 9)