உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

259

31. தேவார ஆராய்ச்சி*

1. இயற்கைக் காட்சிகள்

ஞானசம்பந்தர் தமது தேவாரப் பதிகங்களில் ஆங்காங்கே இயற்கைக் காட்சிகளைக் கூறுகிறார். ஒவ்வோர் ஊரிலும் இவர் கண்ட இயற்கைக் காட்சிகளைக் கண்டது கண்டபடியே கூறுகிறார். சில இடங்களில் அக் காட்சிகளை உருவகப்படுத்திக் கூறுகிறார். இவர் அமைத்துக் காட்டிய சொல் ஓவியங்களை வர்ண ஓவியங்களாகத் தீட்டினால் அவை, இயற்கையழகு வாய்ந்த அழகுள்ள படங்களாக அமையும். அவர் கூறிய சொல் ஓவியச் சித்திரக் காட்சிகளைக் கீழே தருகிறோம். அவற்றைப் படித்து அப் படங்களை அகக் காட்சியிலே கண்டு களிக்கலாம்.

"செய்யருகே புனல்பாய வோங்கிச்

66

செங்கயல் பாயச் சிலமலர்த்தேன் கையருகே கனிவாழை யீன்று

காலெலாங் கமழ் காட்டுப்பள்ளி.

"தளையவிழ் தண்ணிற நீலம் நெய்தல்

தாமரை செங்கழுநீரும் எலாம் களையவிழுங் குழலார் கடியக்

காதலிக்கப்படுங் காட்டுப்பள்ளி.

99

"பொன்னியல் தாமரை நீலம் நெய்தல் போதுகளால் பொலிவெய்து பொய்கைக் கன்னியர் தாங் குடை காட்டுப் பள்ளி.

66

"தெங்குயர் சோலைசேர் ஆலை சாலி

66

திளைக்கும் விளைவயல் சேரும் பொய்கை.

"வண்தாமரை மலர்மேல் மடஅன்னம் நடைபயில வெண்தாமரை செந்தாது உதிர் வீழிமிழலை.

99

மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய 'வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் (1957) எனும் நூலில் இடம் பெற்றுள்ளது.