உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

2. உவமைகள்

265

ஞானசம்பந்தர் தம்முடைய பாடல்களில் சிற்சில இடங்களில் அழகான உவமைகளை நயமாகக் கூறுகிறார். அப் பகுதிகள் சில வருமாறு:

ஒரு பூம்பொழிலிலே வண்டு ரீங்காரஞ் செய்து இசை பாடிக்கொண்டிருக்க, அங்கு ஒரு மயில் தனது தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்க, பொன்போன்ற தாதுகள் நிறைந்த மலரைப் புன்னை மரம் பூத்திருந்தது. இந்தக் காட்சி, அரங்கத்திலே இசைப்பாட்டிற்கு ஏற்ப நடனமாது ஒருத்தி நாட்டியம் ஆட, அதனைக் கண்டு மகிழ்ந்தவர் அவளுக்குப் பொன்னைத் தாராளமாக வழங்குவது போல இருந்தது என்று உவமை கூறுகிறார் ஞானசம்பந்தர்.

"மாதவி மேய வண்டு இசைபாட மயில் ஆடப்

போது அலர் செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்.

99

பொய்கைகளில் தாமரை குமுதம் குவளை நெய்தல் ஆகிய மலர்கள் பூத்து மலர்ந்திருப்பது, தாமரைப்பூ மகளிரின் முகம் போலவும் செங்குமுதம் வாய் போலவும் குவளையும் நெய்தலும் கண்கள் போலவும் காணப்பட்டன என்று உவமை கூறுகிறார்:

66

வாவி தொறும் வண்கமலம் முகங்காட்டச்

செங்குமுதம் வாய்கள் காட்டக்

காவியிருங் கருங்குவளை கருநெய்தல்

கண்காட்டும் கழுமலமே.

وو

மகளிரின் முகத்துக்கும் வெண்ணகைக்கும் கருங்கண்ணுக்கும் செவ்வாய்க்கும் இன்னொரு உவமை கூறுகிறார்:

"கொழுந் தரளம் நகைகாட்ட கோகனகம் முகங்காட்டக் குதித்து நீர்மேல்

விழுந்த கயல் விழிகாட்ட விற்பவளம்

வாய்காட்டும் மிழலை யாமே.

வயலைச் சார்ந்த ஒரு நீர் நிலையிலே தாமரைப் பூ பூத்திருந்தது. அந்தப் பூவின்மேலே ஓர் இளம் அன்னப் பறவை அமர்ந்திருந்தது. பூவிற்கு மேலே, உயர்ந்து நீண்டு வளர்ந்திருந்த ஒரு தாமரை இலை