உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

“கழியருகு பள்ளியிடமாக வடுமீன்கள் கவர்வாரும்.

என்றும், பௌத்தத் துறவிகள் மீன்பிடித்த செய்தியைக் கூறுகிறார். சமண சமய நூலாகிய நீலகேசி உரையிலும் பௌத்தர் கழிகளிலே மீன்பிடித்த செய்தி கூறப்படுகிறது.

5. அரசரைப்பற்றிய செய்திகள்

சம்பந்தர் காலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சங்ககாலத்தின் கடைசியில் இருந்த செங்கண் சோழனை இவர் தமது தேவாரத்தில் சிற்சில இடங்களில் குறிப்பிடுகிறார். அவரைத் தவிர, வெங்குரு, சிரபுரம், புறவம், சண்பை என்றும் வேறு பெயர்களையுடைய சீகாழியில் இவர் காலத்துக்கு முன்பு அரசாண்ட சில அரசர்களின் பெயரைக் கூறுகிறார். அவ்வரசர்கள் தருமன், சிலம்பன், தேர்வலவன், சண்டன், நந்தன் என்பவர்கள்.

66

“செங்கோல் நடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினை மெய்தெரிய எங்கோத் தருமன் மேவியாண்ட வெங்குரு மேயவனே.'

66

66

66

'தலையாய்க் கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணை நடாய்ச் சிலையால் மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுர மேயவனே.

ஒருதேர் கடாவி ஆரமருள் ஒருபது தோள்தொலையப்

பொரு தேர் வலவன் மேவி யாண்ட புறவமர் புண்ணியனே. "தவர்செய் நெடுவேல் சண்டனாளச் சண்பை யமர்ந்தவனே. 'நட்டார் நடுவே நந்தனான நல்வினையா லுயர்ந்த

66

கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சை யமர்ந்தவனே.

99

இதில் கூறப்படுகிற தருமன், சிலம்பன், தேர்வலவன், சண்டன், நந்தன் என்பவர் யாவர்? சோழநாட்டை யாண்ட இவர்கள் சோழ அரசரா? பல்லவ அரசரா? அல்லது வேறு குலத்து அரசரா? என்பது தெரியவில்லை. இதில் தேர்வலவன் என்பவன் ஐந்து பகையரசரின் (ஒருபது தோள்களை) அழித்தான் என்று கூறப்படுகிறான். அந்தப்

பகையரசர்யாவர்?

திருமூக்கீச்சரக் கோயிலைக் கட்டியமைத்தவர் சேர சோழ பாண்டியர் என்று கூறுகிறார். “தென்னவன் கோழியெழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான் செய்த மூக்கீச்சரம்” என்றும், “வடமனீடு

"