உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

பொழிப்பு: சூரியனுடைய களங்கத்தைக் கழுவப்பட்ட சமுத்திரம் போன்ற செனனக்கடலிலே கீழ்ப்பட்டழுந்திக்கெடாநின்ற ன்மாக் களுக்குக் கைப்பற்றிக் கேையறுந் தெப்பமாகப் பிரணவ மென்கிற மந்திரத்தை அவரது செவியின்கண்ணே யுண்டாக்கா நின்றவன்.

மண்ணி என்பது மணியென இடைகுறைந்து நின்றது. புரந்தவன் எனற்பாலது புரத்தவன் என வலித்தல் விகார மாயிற்று.

நான்காமடி

பதபொருள் : சுடர் - விளக்கத்தையுடைய, மணி - நவரத்தினங் களாலே அலங்கரிக்கப்பட்ட, மாளிகை - மாளிகைகள் சூழ்ந்த, தோணி புரத்தவன் - திருத்தோணிபுரத்தின் கண்ணே வாழ்கின்றவன்.

பொழிப்பு: விளக்கத்தை யுடைய நவரத்தினங்களாலே அலங் கரிக்கப்பட்ட மாளிகை சூழ்ந்த திருத்தோணி புரத்திலே வீற்றிருக்குஞ் சிவன் இத்தன்மையன்.

பூசுரர்சேர் பூந்தராயவன் பொன்னடி

பூசுரர்சேர் பூந்தராயவன் பொன்னடி

பூசுரர்சேர் பூந்தராயவன் பொன்னடி

பூசுரர்சேர் பூந்தராயவன் பொன்னடி

6

முதலடி

பூ

பதப்பொருள் : பூ - பூமியிலுள்ளோர், சுரர் - தேவர்கள், சேர் - தோன்றுதல், பூ - இதயகமலம். தராயவன் தரித்தவன், பொன் பொலிவு, அடி கண்ணாடி.

பொழிப்பு : பூமியிலுள்ளாரையுந் தேவகணங்களாயுள்ளாரையுந் தனது நாபிக்கமலத்திலே தோற்றுவிக்கப்பட்ட பிர்மா, விஷ்ணுவினது போதத்திலே கண்ணாடியும் நிழலும்போலப் பிரதிவிம்பியா நின்றவன். (ஆடி என்பது அடியெனக் குறுகிநின்றது)

இரண்டாமடி

பதபொருள்: பூசுரர் - மலத்தைக் கழுவிய சிவஞானிகள், சேர்

திரட்சி, பூ - பொலிவு, தராய் - பெறப்பட்ட, அவன் – அக் கடவுள், பொன் – வனப்பு, நடி- நாடகமாடப்பட்டவன்.

-