உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

இரண்டாமடி

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

பதப்பொருள்: செர் - சத்தாதிக ளஞ்சுஞ் சேரப்பட்ட, உக்கு அந்தப் பூமி, வாய்ப்புடையான் - தன் வாயினிடமாக வுள்ள விஷ்ணு, சிர் – சிறப்பு, அபுரம் - உயிர்போன களேபரம், என்னில் - மேனிலை. பொழிப்பு : சத்தாதிகளஞ்சுஞ் சேரப்பட்ட உலகத்தைத் தன் வாயினிடமாகவுடைய விஷ்ணுவின் களேபரத்தைத் திருமேனியிலே தரித்துள்ளான்.

சேர் எனற்பாலது செர் எனவும், சீர் எனப்பாலது சிர் எனவுங் குறுகிநின்றன.

மூன்றாமடி

பதபொருள் : செருக்கு ஆத்தும விகாரமாகிய கர்வம், வாய் இந்திரியம், புடையான் இடத்தான், சிரம் - மேல், புரம் சரீரம், என்னில் சத்தியம்.

பொழிப்பு: ஆத்தும விகாரமாகிய கர்வத்தினாலே இந்திரியங் களுக்கு விடயமாகிய சுவர்க்கத்தி லிச்சையை யுடையானுக்கு அந்தச் சுவர்க்கம் மெய்யாக விசேஷித்திருக்கு மன்றே.

நான்காமடி

பதப்பொருள் : செருக்கு - இந்திரியயுத்தத்திற்கு, ஆய்ப்பு இளைப்பு, உள்தையான்- உள் தைக்கப்படான், சிரபுரமென்னில் சிரபுரமென்று றுரைக்கில்.

பொழிப்பு : இந்திரிய வன்மையாகிய யுத்தத்துக்கு இளையாமல் அந்த இந்திரியமாகிய பாணங்கள் தனதறிவுக்குள் தைக்கப்படான். தாற்பரியம் - ஒருகாற் சிரபுரமென்று சொன்னவிடத்துப் பஞ்சேந்திரியங் களையும் அவியப் பொருது சிவனுடைய திருவடியிலே அடையா நிற்பன்.

பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்

00