உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை

துன்று பொற்சடை யானைத் தொழுமினே.

பஞ்ச பூத வலையிற் படுதற்கு

அஞ்சி நானும்ஆ மாத்தூர் அழகனை

நெஞ்சி னால்நினைத் தேன்;நினை வெய்தலும்,

வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே.

வேத மோதிலென்? சாத்திரங் கேட்கிலென்? நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்?

ஓதி யங்கம் ஓராறும் உணரிலென்? ஈச னையுள்கு வார்க்கன்றி யில்லையே.

நன்று நோக்கிலென்? பட்டினி யாகிலென்? குன்றம் ஏறி இருந்தவஞ் செய்யிலென்? சென்று நீரிற் குளித்துத் திரியிலென்?

என்றும் ஈசன்என் பார்க்கன்றி யில்லையே.

சுண்ணவெண் சந்தனச் சாந்தும் சுடர்த்திங்கட் சூளா மணியும் வண்ணவுரிவை உடையும் வளரும் பவள நிறமும் அண்ணல் அரண் முரணேறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம் அஞ்சுவதியா தொன்று மில்லை அஞ்ச வருவதும் இல்லை.

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீறர்சுமந் தேத்திப் புகுவாரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன். சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான், முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப் பொன்மாலை மார்பனென் புதுநலமுண் டிகழ்வானோ?

பூங்கழல்தொழு தும்பரவியும் புண்ணியாபுனி தாஉன்பொற்கழல் ஈங்கிருக்கப்பெற் றேன்; என்ன குறையுடையேன்?