உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

சிந்திப் பரியன, சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன் முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி

அந்திப் பிறையணிந்து ஆடும் யாறன் அடித்தலமே.

இருடரு துன்பப் படலம் மறைப்பமெய்ஞ் ஞானமென்னும் பொருடரு கண்ணிழந் துண்பொருள் நாடிப் புகலிழந்த குருடருந் தம்மைப் பரவக் கொடுநர கக்குழிநின்று அவடரு கைகொடுத் தேற்றும்ஐ யாறன் அடித்தலமே.

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான் வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகத்தான் இமயவர்தஞ் சிரத்தின் மேலான் ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன் புனத்ககத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான் கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்

காளத்தி யானவன்என் கண்ணு ளானே.

குலங்கெடுத்துச் கோள்நீக்க வல்லான் தன்னைக் குலவரையன் மடப்பாவை யிடப்பா லானை

மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக் கொண்ட

மறையவனைப் பிறைதவழ்செஞ் சடையி னானைச்

சலங்கெடுத்துத் தயாமூல தன்ம மென்னும்

தத்துவத்தின் வழிநின்ற தாழ்ந்தார்க் கெல்லாம்

நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற் றானை

நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்

தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.