உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

وو

தானைக் கட்டங்கக் கட்டங்கக் கொடியானை. "காபாலி, கட்டங்கம் ஏந்தினானை.” கட்டங்கக் கொடி திண்டோ ளாடக் கண்டேன்.”

இவருக்கு இளையரும் இவர் காலத்தில் இருந்தவருமான திருஞானசம்பந்தரும் கட்டங்கத்தைக் கூறுகிறார். “கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கள்,” என்று அவர் கூறியது காண்க. 4. ஆரியமும் தமிழும்

ஆரியக்கலையும் தமிழ்க்கலையும் நன்கு கலந்தது “இந்து” சமயம். “இந்து” சமயம் என்பது சைவ வைணவ சமயமாகும். வைதிகப் பிராமணராகிய ஆரியர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில் வந்திருந்தனர். ஆனால், தமிழ்ப் பண்போடு (திராவிடப் பண்புடன்) கலக்காமல் நெடுங்காலம் தனித்து இருந்து தமது வைதிக ஒழுக்கத்தை நடாத்தி வந்தனர். அவர்கள் தனித்து இருந்த வரையில் அவர்கள் தமிழ்நாட்டிலே சிறப்படைய முடியவில்லை. பௌத்தரும் சமணரும் வைதீக ஆரியரை அடக்கி வைத்தனர். ஆதியில் வைதீகப் பிராமணர் இலிங்க வழிபாட்டையும், சிவன் திருமால் வணக்கத்தையும் மேற் கொள்ளா ணமல் புறக்கணித்தார்கள். ஆகவே அவர்கள் அக்காலத்தில் சைவ வைணவர்களாலும் பௌத்தர் சமணர்களாலும் புறக்கணிக்கப் பட்டிருந்தனர். பிறகு வைதீகர், திராவிடரின் கடவுள் வழிபாட்டை ஏற்றுக்கொண்டு சைவ வைணவ மதத்துடன் கலந்து கொண்டனர். அதாவது தமிழர் (திராவிடர்) நாகரிகமும், ஆரிய (வைதீக) நாகரிகமும் கலக்கப்பெற்றன. ஆரியக்கலையும் தமிழ்க் கலையும் உறவு கொண்டன. திராவிடக்கலையை மேற்கொண்ட பிறகுதான் வைதீகப் பிராமணரின் நிலை உயர்ந்தது

திருநாவுக்கரசர் இந்தத் திராவிட ஆரிய சமயக் கலப்பைத் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். இவர் காலத்திலிருந்த இவருக்கு இளையரான திருஞான சம்பந்தரும் இந்தக் கலப்பைக் கூறுகிறார். ஆரியம் - தமிழ் என்னும் இரண்டு பண்புகளும் ஒன்று சேர்ந்ததுதான் சைவம் என்று திருநாவுக்கரசர் கூறும் வாக்குகள் இவை :

"ஆரி யந்தமி ழோடிசை யானவன்.

“ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்.

“அண்ணா மலையுறையும் அண்ணல் கண்டாய்.