உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

“வேதநான்கும் கல்லாலின் நீழற்கீழ் அறங்கண்டானை. "பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும் 'வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ.

66

ஆலதன் கீழிருந்து நால்வர்க்கு

'அறம் பொருள் வீடின்பம்

'ஆறங்கம் வேதம் தெரித்தானை.

343

என்றும் கூறுகிறார். இவ்வாறு ஆரிய திராவிடக்கலைக் கலப்பைக் கூறிய நாவுக்கரசர், “புதியனவுமாய் மிகவும் பழையான்தன்னை” என்று ஒரே சொல்லில் முடிவாகக் கூறிவிட்டார்.

இவருக்கு வயதில் இளையரான இவர் காலத்திலிருந்த ஞானசம்பந்தரும், ஆரியவேதத் திராவிடவேதக் கலப்பினைத் தமது தேவாரப் பாடல்களில் ஆங்காங்கே காட்டுகிறார். இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையும் சிவபெருமான் அருளிச்செய்தார் என்று ஆங்காங்குக் கூறிய ஞானசம்பந்தர், சிவபெருமான் ஆலநிழலிலிருந்து அறமுரைத்தார் என்றும் கூறுகிறார். அவற்றில் சில வருமாறு:-

66

66

66

66

'மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை

ஆலடைந்த நீழல் மேவி யருமறை சொன்னதென்னே. அழிந்த சிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.

'நண்ணியோர் வடத்தி னீழல் நால்வர் முனிவர்க்கன்று எண்ணிலி மறைப் பொருள் விரித்தவர்...

‘ஓரானீழல் ஒண்கழல் இரண்டும்

முப்பொழு தேத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை.

“கல்லா னிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்று

எல்லா வறனுரையும் இன்னருளாற் சொல்லினான்.

“அங்கம் நான்மறை, நால்வர்க் கறம்பொருளின்பம் பயனளித்த திங்கள் சேர் சடையான்.