உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

பத்திரர். பாணபத்திரர் பொருட்டுச் சிவபெருமான், சேரமான் பெருமாள் நாயனாருக்குத் திருமுகப் பாசுரம் அளித்தார் என்று வரலாறு கூறுகிறது. சேரமான் பெருமாளும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் நண்பர்களாக இருந்து இருவரும் பாண்டிநாடு சென்றனர் என்றும் அங்குப் பாண்டி யனும், அவன் மருகனான சோழனும் அவர்களை வரவேற்றார்கள் என்றும் சேரசோழ பாண்டியர் மூவரும் ஒருங்கிருந்ததைச் சுந்தரர் தமது தேவாரத்தில் பாடினார் என்றும் பெரியபுராணம் கூறுகிறது.

66

"கோத்திட்டை என்றெடுத்துக் கோதில்திருப் பதிகஇசை

66

மூர்த்தியார் தமைவணங்கி முக்கோக்களுடன் முன்பே ஏத்தியவண் தமிழ்மாலை இன்னிசைபாடிப் பரவிச் சாத்தினார் சங்கரனார் தங்குதிருப் பரங்குன்றில்.

முறைபுரியும் முதல்வேந்தர்

மூவர்களும் கேட்டிறைஞ்சி

மறைமுந்நூல் மணிமார்பின்

வன்றொண்டர் தமைப்பணிந்தார்.”1

99

இதற்கேற்பவே, சுந்தரர் “திருக்கோத்திட்டையும் திருக்கோவ லூரும்” பதிகத்தின் கடைசிச் செய்யுளில் “முடியாலுலகாண்ட மூவர் முன்னே மொழிந்ததாகக் கூறுகிறார்.

சிவபெருமான் சேரமான் பெருமாள் நாயனாருக்குத் திருமுகம் அனுப்பியது வரகுணபாண்டியன் காலத்தில், சேரமான் பெருமாளும் சுந்தரரும் நண்பர்களானது வரகுணபாண்டியன் காலமான பிறகு அதாவது சுந்தரர் 17 வயதுள்ள வாலிபராக இருந்தபோது. வயதால் மூத்தவராகிய சேரமான் பெருமாள் சுந்தரருடன் நண்பரானார். சந்தரருடன் சேரமான் பெருமாள் மதுரைக்குச் சென்ற போது அவர்களை வரவேற்ற பாண்டியன், வரகுணபாண்டியனின் மகனான ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் என்பது தெரிகிறது.

இதனால், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திலே மாணிக்கவாசகர் இருந்தார் என்பது தெரிகிறது. மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்திக்கு வயதினால் மூத்தவர்.

அப்படியானால், சந்தரர் மாணிக்கவாசகரை ஏன் திருத் தொண்டத் தொகையில் கூறவில்லை? இந்தக் கேள்விக்கு விடை என்ன? கழறிற்றறிவார் புராணம் 103, 104.

1.