உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வட்டன்றே நீரிதனை மிகவுங் காண்மின் மற்றைக்கை கொட்டினேன் மாவின் வித்தொன் றிட்டன்றே பழம் பழுப்பித் துண்ணக் காண்மின் இவையல்ல சம்பிரத மிகலில் தெள்ளாற் றட்டன்றே பொன்றும்வகை முனிந்த நந்தி அவனிநா ராயணன்பா ராளுங் கோமான் குட்டன்றே மழைநீரைக் குடங்கைக் கொண்டு குரைகடலைக் குடிக்கின்றேன் குடிக்கின்றேனே.

கட்டளைக் கலித்துறை

391

குடக்குடை வேந்தன்தென் னாடுடை மன்னன் குணக்கினொடு வடக்குடை யான்நந்தி மானோ தயனிந்த வையமெல்லாம்

படக்குடை யேந்திய பல்லவன் றன்னொடும் பாரறியத்

64

துடக்குடை யாரையல் லாற்சுடு மோவிச் சுடர்ப்பிறையே.

கலி விருத்தம்

பிறைதவழ் செஞ்சடைப் பிறங்க னாரணன்

அறைகழல் முடித்தவன் அவனி நாரணன்

65

நறைகெழு தொண்டையோன் தொண்டை கண்டபி

னிறைகெழு சங்குயி ரிவளுக் கீந்ததே.

66

ஷை வேறு

ஈகின்றது புனமுந்தினை யாமும்பதி புகுநாள்

ஆகின்றது பருவம்மினி யாகும்வகை யறியேன்

வாழ்கின்றதோர் புகழ்நந்திதன் வடவேங்கட மலைவாய்த் தேய்கின்றதொ ருருவத்தொடு திரிவாரது திறமே.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

திறையிடுமி னன்றி மதில்விடுமி னுங்கள் செருவொழிய வெங்கண் முரச

மறைவிடுமி னிந்த வவனிதனி லெங்கு

மவனுடைய தொண்டை யரசே

67