உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

401

13. ற்றித் தடி மூன்றும் பகைதொங்கன் தடி ஒன்றும் ஏற்றித்தடி பதினைஞ்சு விதைமடைப்பள்ளிநா

14. ழியால் ஆயிரத்து இருநூற்று நாழியுங் காராண்மை மீதாட்சி உள்ளடங்க (உறா?) அட்டிக்குடுத்தன வள்ளு.....

(இரண்டாம் ஏடு, ழன்பக்கம்)

1. பணி குத்துக்காற்படாது செய்விப்பது அகழாழிகைப் பணி செய்வார் படாரரை ஆட்டப் பொழுதிற் பந்திருகுடநீராக முப்ப 2. த்தறு குடநீர் குடுப்பது பூஇடுவான் குறைந்த பூ இண்டையு மாலையுங் கட்டிக் குறைவறக் குடுப்பது நொந்தா விளக்கினுக்காக மெ

3. துகின் மேற்பாற் கீழூரில் நெடுமண்ணென்னுந் தோட்டம் தென்னாட்டுக் கோனாயின சடையந் தனிச்செய்கெ சந்ததி சந்த

4. தி யேய்கீழ்பாதி அனுபவிப்பதாகக் காராண்மை யாகவு மேற்பாதி நந்தா விளக்கினுக்குமாக அட்டிக் குடுத்தான் 5. விழாப்புறமாக ஏழுநா டிருவிழாச்செய்து பங்குனி வியாகம் ஆறாடுவதாகவும் சட்டப்பெருமக்களும் பணிமக்க

6. ளும் ஏழு நாளும் படி இரட்டி ஆணியம் பெறுவதாகவு மற்றும் விழா வினுக்கு வேண்டுவதுக்குமாக அட்டின பூ 7. மி மெதுகின் மேற்பாதி கீழூர் பெருங்குளத்தின் கீழ் ஆதன்றை இளவரதன்றை தலைத்துடவை மஞ்சாடி யரைப் 8. னையறை செத்தறைதடி இரண்டேற்றித்தடி ஏழு விதை எண்ணூற்று நாற்பதினாழி இவை தென்னாட்டுக் கோனாயினச 9. டையந்தனிச்செய்கை சந்ததி சந்ததியேய் போகத்துக்கும் பொலிக்கும் ஆயுவிக்கதிரேற்றி உடன்வாரம் நாற்கல

(இரண்டாம் ஏடு, பின்புறம்)

10. னேய் எண்குறுணி நெல்லுக்கொண்டு கீழ்பாதி காராண்மை யாக உழுது ஆலிலை வாரம் ஊட்டு வதாக மேற்பாதி திருவிழாப்பு