உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

"நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்

நரைத்தார் இறந்தா ரென்று நானிலத்தில்

சொல்லாய்க் கழிகின்ற தறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே”1

இச்செய்யுள்,

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு

என்னும் திருக்குறளை நினைவுறுத்துகிறது. அன்றியும்,

66

'புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்த அறவினை இன்னினியே

-

நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேளலறச் சென்றான் எனப்படுத லான்

என்னும் நாலடியார் செய்யுளையும் நினைவுறுத்துகிறது.

66

‘வறிதே நிலையாத விம்மண் ணுலகில் நரனாக வகுத்தனை நானந்நிலையேன் பொறிவாயிலி வைந்தனையும் அவியப் பொருதுன் அடியே புகுஞ்சூழல் சொல்லே"2 இச்செய்யுள்,

992

“நில்லா தவற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை

என்னும் திருக்குறளையும்,

66

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து

413

என்னும் திருக்குறளையும், "பொறிவாயி லைந்தவித்தான்” என்னும் திருக்குறள் சொற்றொடரையும் நினைவுறுத்துகிறது. மேலும்,

66

‘துஞ்சினா ரென்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்

எஞ்சினா ரிவ்வுலகத் தில்

1. திருநெல்வாயில் அறத்துறை 1.

2. திருநெல்வாயில் அறத்துறை. 2.