உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

பழமொழிகளும் உவமைகளும்

415

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரப் பதிகங்களில் பழமொழி களையும் உவமைகளும் கூறுகிறார். அவைகளை இங்கு ஆராய்வோம்.

66

ஆதன் பொருளானேன் அறிவில்லேன் அருளாளா

66

991

இது, திருநாவுக்கரசர் திருவாரூர்ப் பழமொழிப் பதிகத்தில் (5) கூறிய ஏதன் போர்க் காதனாய் அகப்பட்டேனே” என்னும் பழமொழியை நினைவூட்டுகிறது.

“பிண்டஞ் சுமந் தும்மொடுங்கூட மாட்டோம்

66

பெரியாரொடு நட்பினி தென்றிருந்தும் அண்டங் கடந்தப் புறத்து மிருந்தீர்

அடிகேளுமக் காட்செய வஞ்சுதுமே”2

இதில், “பெரியாரொடு நட்பு இனிது” என்னும் பழமொழி வந்துள்ளது.

வாணார் நுதலார் வலைப்பட்டு அடியேன்

பலவின் கனியீயந்து போல்வதன் முன்

ஆணொடு பொண்ணாமுரு வாகி நின்றாய் அடியே நுய்யப் போவதோர் சூழல்சொல்லே

"பலாப்பழத்தை ஈ மொய்ப்பதுபோல்" என்னும் பழமொழி இதில்

கூறப்படுகிறது.

“குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால்

அடியார் தமக்கோர் குடியே யொத்தியால்

“வாடிய பயிருக்கு மழை பெய்தாற் போல" என்னும் உவமை கூறப்பட்டது.

66

"எள்விழுந் திடம்பார்க்கு மாகிலும்

ஈக்கும் ஈகில னாகிலும்

வள்ளலே எங்கள் மைந்தனே யென்று

வாழ்த்தினுங் கொடுப்பாரிலை

99

“எச்சிற் கையாலும் ஈ ஓட்டமாட்டான்” என்னும் பழமொழி இதில் வந்துள்ளது.

1.

வெண்ணெய் நல்லூர் 4.

2. கோத்திட்டையுங் கோவலூரும் 2

3. திருவஞ்சைக்களம் 4.