உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பரும் சரளரும்*

தமிழ்நாட்டுப் புலவராகிய கம்பரும் ஒரி சேரநாட்டுப் புலவரான சரளரும் புகழ்பெற்ற பெரும்புலவர்கள். கம்பர் தமிழில் இராமாயணம் இயற்றிப் புகழ் பெற்றார். சரளரும் ஒரியா பாஷையில் பாரத இராமாயணங்களை இயற்றிப் புகழ் பெற்றார். மேலும் இவ்விரு புலவர்களின் வாழ்க்கையும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

ஒரிசா தேசம் ஆந்திர தேசத்துக்கு வடக்கே கடற்கரை யோரத்தில் இருக்கிறது. ஒரிசா தேசத்துக்கு ஒட்டர தேசம் என்றும் ஒடியதேசம் என்றும் உத்கலதேசம் என்றும், கலிங்கதேசம் என்றும் பழைய காலத்தில் பெயர்கள் வழங்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒட்டர அல்லது ஒடிய என்னும் பெயரை ஒரிசா என்று வழங்கினார்கள். அப்பெயரே இப்பொழுதும் வழங்கிவருகிறது.

ஒரியா தேசத்தில் பேசப்படுவது ஒரியா மொழி. ஒரியா மொழிக்குத் தனிச் சிறப்பு உண்டு. மற்றப் பாஷைகளிலே பேசும் மொழிக்கும் எழுதும் மொழிக்கும் சிறிதுவித்தியாசம் உண்டு. ஆனால் அவ்வித வேறுபாடு ஒரியா பாஷையில் இல்லை. பேசுவது போலவே எழுதப்படுகிறது.

ஒரிசா நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் பழைய காலத்தில் சரித்திர சம்பந்தமாகத் தொடர்பு உண்டு. நிற்க.

நாட்டுப்பெரும்புலவரான

ஒரிசா சரளதாசரைப்பற்றிக் கூறுவோம். சரளதாசருக்குத் சரஸதாசர் என்ற பெயரும் உண்டு.

கம்பர் வாழ்ந்திருந்த இடம் திருவழுந்தூரில் கம்பர்மேடு என்று இன்னும் தமிழரால் போற்றப்படுகிறதல்லவா! அது போலவே, சரளர் அடக்கஞ் செய்யப்பட்ட இடம் இன்றும் ஒரிசா மக்களால் போற்றப் படுகிறது. ஒரிசா தேசத்தில் கட்டாக் மாவட்டத்தில் கனகபுரம் என்னும் கிராமத்துக்கு அருகில் ஒரு ஆலமரத்தின் கீழே சரளரில் சமாதி இருக்கிறது. தமிழர் கம்பரைப் போற்றுவது போலவே ஒரிசா மக்கள் சரளரை இன்றும் போற்றுகிறார்கள்.

  • செங்கற்பட்டு மாவட்டத் தமிழ் எழுத்தாளர் சங்கம். இரண்டாவது மாநாட்டு மலர் (1963)