உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

43

ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியிலிருந்து சமஸ்கிருத மொழியில் போனது ஏறக்குறைய கி.பி. 5ஆம் நூற்றாண்டில் என்று சான்று காட்டிச் சிவராசபிள்ளை கூறினார். அதே செய்தியைக் கூறும் வையாபுரிப் பிள்ளை சான்று காட்டாமலே ஓரை என்னுஞ் சொல் சமஸ் கிருதத்தில் சென்றது கி.பி.4, அல்லது 5ஆம் நூற்றாண்டில் என்று கூறுகிறார். ஆனால், ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியிலிருந்து முதலில் சமஸ்கிருதத்தில் சென்று பிறகு, சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் நுழைந்தது என்று இருவரும் மாறுபாடு இல்லாமல் கூறுகிறார்கள்.

இவ்வாறு கூறுவதில்தான் இவர்கள் உண்மை காணும் நோக்கத்துடன் ஆராயவில்லை என்பதும் சார்பு பற்றிப் பக்கஞ் சார்ந்து பேசுகிறார்கள் என்பதும் விளங்குகின்றன. கண்ணை மூடிக்கொண்டு மூடபக்தி காரணமாகச் சமஸ்கிருதத்திற்குத் தொன்மை ஏற்றிக் கூறுவதும், உண்மையை மறைத்து வேண்டுமென்றே தமிழ்நூலைப் பிற் காலத்திற்குத் தள்ளிக் கூறுவதும் இவர்களுடைய நோக்கம் என்பது நன்கு விளங்குகின்றது. இதனை விளக்குவோம். இவர்கள் கருதுவது போல, ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழியிலிருந்து தமிழில் வந்த தாகவே வைத்துக்கொள்வோம். கிரேக்கருக்கும் தமிழருக்கும் வாணிகத் தொடர்பினால் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்த காலத்தில் கிரேக்க மொழிகள் தமிழிலும், தமிழ் மொழிகள் கிரேக்கத்திலும் புகுந் திருக்கும் என்பது உண்மையே. மேலே காட்டிய மத்திகை, சுருங்கை, கலம், கன்னல் போன்ற கிரேக் மொழிச் சொற்கள் தமிழில் கலந்தது போலவே. ஓரை என்னும் சொல்லும் (இது கிரேக்க மொழியிலிருந்து தமிழில் வந்ததாக இருந்தால்) - தமிழர் யவனர் வாணிபத் தொடர் பிருந்த கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குள் தமிழில் கலந்திருக்க வேண்டும். (கி.பி.3ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கிரேக்கரின் வாணிபத் தொடர்பு தமிழ் நாட்டில் நின்றுவிட்டது.) வாணிபத் தொடர்பு இருந்த அக்காலத்திலேதான் அரிசி முதலிய தமிழ்ச் சொற்கள் கிரேக்க மொழியில் சென்றிருக்க வேண்டும். (அரிசிக்குக் கிரேக்க மொழியில் ஒரிஜா (Oryza) என்பது பெயர்) இதுதான் இயற்கை. இந்த இயற்கையான, நேரடியான சந்தர்ப்பத்தில் ஓரை என்னுஞ்சொல் தமிழில் கலந்து வழங்காமல், வாணிகத் தொடர்பு அற்றுப்போன பிறகும் சில நூற்றாண்டு வரையில் காத்திருந்து, அச்சொல் கி.பி.5ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் நுழைந்த பிறகு அதிலிருந்து அச்சொல்லைத் தமிழ்மொழி கடன் வாங்கிற்று என்று ஒருவர்