உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

இதிலிருந்து கற்றலை என்னும் பெயருள்ள ஒருவகை மீன் உண்டென்று அறிகிறோம். இப்பெயர் உலகவழக்கில் கத்தலை என்று வழங்கப்படுகிறது.

ளு

பள்ளு என்னும் பெயருள்ள ஒருவகைப் பிரபந்த நூல்கள் பிற்காலத்திலே தமிழில் தோன்றி வளர்ந்தன. இந்நூல்கள் காலத்தினால் பிற்பட்டவை. இந்தப்பள்ளு நூல்களிலே நீர்வளத்தைக் கூறுகிற ஆற்றுச் சிறப்புக்கவிகளில் பலவகை மீன் வகைகள் கூறப்படுகின்றன. வைகளிலிருந்து மீன்வகைகளின் பெயரை நன்கு அறிந்து

கொள்ளலாம்.

மீன்களிலே, உவர்நீராகிய கடலில் உள்ள மீன்கள் என்றும், உவர்ப்பற்ற ஏரி, குளம், ஆறுகளாகிய நன்னீரிலுள்ள மீன்கள் என்றும் இருவகையுண்டு. வாளை, வரால், இரால் முதலிய மீன்கள் உவர்நீர், நன்னீர் என்னும் இருவகை நீரிலும் காணப்படுகின்றன. சில மீன்கள் வர்நீரில் மட்டும் வாழ்வன. சில மீன்கள் நன்னீரில்மட்டும் வாழ்வன. இந்தப் பாகுபாட்டினைப் பள்ளு நூல்களில் காணமுடியாது. இந்நூல்களிலே, ஆற்றுச் சிறப்பைக் கூறுகிறபோது, நன்னீரிலே வாழ்கிற மீன்களை மட்டும் கூறவேண்டியிருக்க கடல் மீன்களின் பெயர்களையும் சேர்த்துக் கூறுப்படுகின்றன. இந்நூல்களிலே, கூறப்படுகிற மீன்வகைகளைக் காண்போம்.

முக்கூடற்பள்ளு என்னும் நூல், பொருநையாற்று வெள்ளத்தில் காணப்பட்டதாகக் கீழ்கண்ட மீன்வகைகளைக் கூறுகிறது.

உதைத்து விகைகொண் டெதிர்த்துக் கடலின்

உதரங் கீறி அதிரும் நீர்

உதயவரைக்கும் பொதிகை வரைக்கும் ஒத்துப் போம்படி முற்றம் போய்

பதைத்து நெளியும் துதிக்கை ழக்கன்,

பண்ணைச்சாளை, எண்ணெய்மீன் பசலி, திருக்கை, கசலி, கெளுத்தி, பண்ணாக்கும் பழம் பாசிமீன்

வதைக்கும் மகரம், குதிக்குஞ் சள்ளை,. மத்தி, உல்லம், பொத்தி மீன்,

மடந்தை, கடந்தை, சம்பான், நொறுக்கி,

மலங்கும், பஞ்சலை, கருங்கண்ணி,