உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

உள்ளன் தலைப்படல் ... துஞ்சூமன் கண்டகனா,” என்பது திரி கடுகம். நீர்நிலைகளில் சிறுமீன்களை உண்டு வாழ்கிற உள்ளன் பறவை (இது உள்ளான் என்றும் வழங்கப்பெறும்.) அதைவிட உருவத்தில் பெரிய வாளைமீனைப் பிடித்து உண்ண முடியாது என்பது இதன் கருத்து. இதன்வகை: சொட்டை வாளை, கருவாளை, பவளவாளை, மூக்கன்வாளை, பன்றிவாளை.

ஏனைய மீன்வகைகளின் உட்பிரிவுப் பெயர்களை, பட்டினவர் என்றும் பரதவர் என்றும் கூறப்படுகிற நெய்தல் நிலமிக்களிடமிருந்து அறியலாம்.

சென்னையில், அரசாங்க மீன்காட்சிச்சாலை பேர்போனது. இத்தகைய மீன்காட்சிச்சாலை உலகத்திலே வேறெங்கும் கிடையாது என்று பெருமையாகப் பேசப்படுவது. இந்தக் கண்காட்சிச்சாலை, சென்ற உலகயுத்தம் காரணமாக மூடப்பட்டிருக்கிறது. மீண்டும் அக் காட்சிச்சாலையை அரசியலார் திறப்பார்களானால், அங்குப் பலவித மீன்களையும் உயிரோடு நேரில் கண்டுகளிக்க வாய்ப்பாகும்.

நிற்க, மீன் இனங்களின் பெயர்களைத் தமிழ் இலக்கியங்களில் காண்பது போலவே, தாவர இனங்களின் பெயரையும் ஏராளமாகத் தமிழ் இலக்கியங்களிலும் தமிழ் சாசனங்களிலும் காண்கிறோம். அவற்றையும் ஆராய்வது தமிழர் கடமையாகும்.