உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

45

காலத்தில் வந்திருக்கக்கூடும் என்று ஆராய்ந்தால், நிச்சயமாகக் கி.பி. முதல் நூற்றாண்டிலே வந்திருக்க வேண்டும் என்று சரித்திரச் சான்று கொண்டு உறுதியாகத் துணியலாம். ஆகவே, சிவராசபிள்ளையும் வையாபுரிப் பிள்ளையும் சார்பு பற்றி நடுநிலை தவறிக் கூறுகிற இந்தக் கருத்து ஏற்கத்தக்கது அன்று எனத் தள்ளுக.

இப்படிச் சொல்லுவதனாலே, ஓரை என்னும் சொல்லை ஆள்கிற தொல்காப்பியம் கி.பி. முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டில் (கிரேக்க - தமிழ் வாணிபத் தொடர்பு இருந்த காலத்தில்) இயற்றப்பட்ட நூல் என்று நான் கூறுவதாகக் கருத வேண்டாம். ஏனென்றால், முதலிலேயே நான் சொன்னது போல, ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழிச் சொல்தானா என்பதில் பலமான ஐயம் இருக்கிறது. ஓரை அல்லது ஹோரா என்னும் சொல் கிரேக்க மொழியில் வழங்கி வரலாம். அச்சொல்லைக் கிரேக்க (யவன) மொழியிலிருந்து சமஸ்கி ருத மொழிக்காரர் கடன் வாங்கியும் இருக்கலாம். ஆனால், தமிழில் வழங்கும் ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழிச் சொல்தானா என்பதில் ஐயம் இருக்கிறது. இச்சொல் வேறு மொழியிலிருந்து தமிழில் வந்து கலந்ததாக இருந்தால் சுமேரிய மொழியிலிருந்து வந்திருக்க வேண்டும். இதனை விளக்குவோம்.

ஓரையென்னுஞ் சொல் இராசி என்னும் பொருளுள்ள தமிழ்ச் சொல்லாகவே இருக்கலாம். இச் சொல்லைக் கிரேக்கர்கள் தமிழி லிருந்து கடன்பெற்றிருக்கலாம். அரிசி என்னும் சொல்லை ஒரிஜா என்று கிரேக்கர் வழங்கியதுபோல ஓரை என்னுஞ் தமிழ்ச் சொல்லை ஹோரோ என்று வழங்கியிருக்கலாம். அல்லது, ஆதிகாலத்தில் கிரேக்க நாட்டில் வசித்திருந்த திராவிட இனத்தவரிடமிருந்து கிரேக்கர் இச்சொல்லைப் பெற்றிருக்கக்கூடும். மிகப் பழைய காலத்தில், பழைய திராவிட இனத் தவர் கிரேக்க தேசத்திலும் அதை அடுத்த கிரீட் முதலிய தீவுகளிலும் வாழ்ந்திருந்தார்கள் என்றும், பிற்காலத்தில் ஆரியராகிய கிரேக்கர் வந்து அந்த நாட்டில் குடியேறித் தங்கினார்கள் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கிரேக்க நாட்டில் வந்து தங்கிய ஆரியராகிய கிரேக்கர்க்ள, அவர்கள் வருவதற்கு முன்பே அந்நாட்டில் வாழ்ந்திருந்த பூர்வீகத் திராவிடரிடமிருந்து ஓரையென்னுஞ் சொல்லைப் பெற்றிருக்கக்கூடும். மேலும் ஐரோப்பா கண்டத்தில் இப்போதும் இருக்கிற ஜிப்ஸிஸ் என்னும் நாடோடி மக்கள் பேசுகிற மொழியில்