உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

பட்டரும் தம்முடைய உரைகளில் நீர், மீன், குயில், தாமரை முதலான தமிழ்ச் சொற்களைச் சமஸ்கிருத பாஷை கடன் வாங்கியிருப்பதைத் தெளிவாகக் கூறியுள்ளனர். சமஸ்கிருத பாஷையைக் கற்றவர்களான ஜர்மனி, பிரான்ஸ் முதலிய மேல்நாட்டு அறிஞர்களும், திராவிட பாஷைச் சொற்கள் பலவற்றைச் சமஸ்கிருத மொழி கடனாகப் பெற்றிருக்கிறதை எடுத்துக்காட்டியுள்ளனர். கன்னட மொழி அகராதி எழுதிய டாக்டர் கெட்டில் என்னும் ஐரோப்பியர், திராவிட மொழிகளி லிருந்து சமஸ்கிருதத்தில் சென்று வழங்குகின்ற நூற்றைம்பதுக்கு மேற்பட்ட சொற்களை அந்நூலின் முகவுரையில் எடுத்துக்காட்டி யுள்ளார். சமஸ்கிருத பாஷை என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய பர்ரோ அவர்கள்' 'சமஸ்கிருத பாஷையில் வேறு மொழிச் சொற்கள் என்னும் அதிகாரத்தில், சமஸ்கிருத மொழியில் கலந்துள்ள திராவிட மொழிச்சொற்களின் பெரிய பட்டியலைக் கொடுத்திருக்கிறார். பர்ரோவும் எமுனோவும் சேர்ந்து அண்மையில் வெளியிட்ட திராவிட மொழி அகராதியிலே, பல நூற்றுக்கணக்கான திராவிட பாஷைச் சொற்கள் சமஸ்கிருத மொழியிலே கலந்திருப்பதை எடுத்துக் காட்டி யுள்ளார்கள்.

2

ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் சமஸ்கிருத மொழியில் மூட பக்திகொண்டவர்கள் கருதுவதில்லை. தங்களுடைய வரட்டு மூட நம்பிக்கையைத் திருப்பித் திருப்பிக் கூறிவருகிறார்கள். எல்லோரை யும் எக்காலத்திலும் ஏமாற்றிக்கொண்டிருக்கமுடியாது என்பதை அறிந்திருந்தும். பழைய மூடத்தனத்தையே இக்காலத்திலும் ஆதாரமாகக் காட்டி வருகிறார்கள்.

·

வடமொழி நாட்டிய சாஸ்திரத்திலிருந்து சில கருத்துக்களைத் தொல்காப்பியர் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அவர்களில் சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரம் என்ன காட்டுகிறார்கள் என்றால், வட மொழி நாட்டிய சாஸ்திரத்தில் தொல்காப்பியர் கூறுகிற கருத்துக்கள் காணப்படுகின்றன என்பதுதான்! தொல்காப்பியத்தில் கூறப்படுகிற கருத்துக்கள் வடமொழி நாட்டிய சாஸ்திரத்திலே காணப்படுவதால், அவை தொல்காப்பியத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்று கூறலா மல்லவா? ஆனால் இவர்கள் அப்படிக் கூறுவதில்லை. சமஸ்கிருதத்தி

1. The Sanskrit Language by T. Burrow. PP 373-388.

2.

A Dravidian Etymological Dictionary, by T. Burrow and M. B. Emeneau. 1961.