உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

சீரோடு திருவளரச் செய்தார் வேந்தன பொழுதேய் நீரோட்டிக் கொடுத்தமையான்.”z இவ்வாறு வேள்விக்குடி கூறுவதால், பாண்டியன் முது குடுமிப்பெருவழுதி வேள்விக்குடி என்னும் ஊரைத் தானங் கொடுத்தான் என்பது தெரிகிறது. களப்பிரர் அவனை வென்றதாகச் சாசனம் கூறவில்லை. அவனுக்குப் பிற்காலத்தில், அவன் பரம் பரையில் வந்த வேறு ஒரு பாண்டியனைக் களப்பிரர் வென்றதாகப் பொருள்படும்படி வேள்விக்குடி சாசனம் கூறுகிறது. சாசனம் மேலும் தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள் :

"வேந்த னப்பொழுதேய் நீரோடட்டிக் குடுத்தமையா னீடு புக்தி துய்த்தபின் னளவரிய ஆதிராசரை அகல

நீக்கி அகலிடத்தைக் களபர னென்னுங் கலியரசன் கைக் கொண்டதனை இறக்கிய பின்.

99

இவ்வாறு சாசனம் கூறுவதிலிருந்து வேள்விக்குடியைத் தானமாகப் பெற்றவர், பரம்பரை பரம்பரையாக நெடுங்காலம் அந்தத் தானத்தை அநுபவித்து வந்தார்கள் என்பது தெரிகிறது. நீடுபுக்தி துய்த்தபின் என்று சாசனம் கூறுவதை நோக்குக. இதனால், வேள்விக்குடியைத் தானமாகப் பெற்றவர் பல தலைமுறை அதனைப் பரம்பரை பரம்பரையாக அநுபவித்து வந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தானம் பெற்ற குடும்பத்தினர் பல தலைமுறையாக அதனை அநுபவித்து வந்தார்கள் என்றால், தானம் கொடுத்த அரசர் பரம்பரையிலும் பல அரசர்கள் அரசாண்டார்கள் என்பது சொல்லாமலே விளங்குகிறது.

66

ஆகவே, முதுகுடுமிப் பெருவழுதியைக் களப்பிரர் வென்று பாண்டி நாட்டைப் பிடித்துக் கொண்டார்கள் என்று சுப்பிரமணிய ஐயர் கூறுவது தவறாகிறது. “நீடு புக்தி துய்த்தபின் அளவரிய ஆதிராசரை அகல நீக்கி அகலிடத்தைக் களபரனென்னுங் கலியரசன் கைக் கொண்டதனை இறக்கிய பின்” என்று வேள்விக்குடி சாசனம் தெளி வாகக் கூறுகிறபடியினாலே, முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பிறகும் பல பாண்டிய அரசர்கள் பாண்டிநாட்டை அரசாண்டார்கள் என்பதும், அதன் பின்னரே களப்பிரர் பாண்டி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதோடு தானங்கொடுக்கப்பட்ட வேள்விக்குடியையும் பறித்துக் கொண்டார்கள் என்பதும் ஐயமற விளங்குகின்றன.

2 Epigraphia Indica; Vol. XVII pp.291-309.