உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

வருணனுக்கு உபுல்வன் என்னும் பெயர் எப்படி உண்டாயிற்று? உதகபால வருணன் என்னும் சொல்லின் சிதைவுதான் உபுல்வன் என்பது. உதகபாலன் என்றால் நீரை ஆட்சி செய்கிறவனென்பது பொருள். சிங்கள இலக்கண முறைப்படி உதகபால என்பது உதபால என்றாகிப் பின்னர் உதபால என்பது உபுல் என்றாயிற்று என்பர். சிங்கள மொழி அறிந்தவர். வன் என்பது வருணன் என்னும் சொல்லின் திரிபு என்பர். வருணன் என்பது வணன் என்றாகிப் பின்னர் வணன் என்பது வன் என்றாயிற்று. எனவே, உதகபால வருணன் என்னும் சொல்லின் திரிபு உபுல்வன் என்பது. உதகபாலன் என்பது நீர்க்கடவுளாகிய வருணனையே குறிக்கும். தேவுந்தர நகரத்தில் கோயில் கொண்டிருந்த உபுல்வன் (உதகபால வருணன்) தெய்வம், கடலிலிருந்து வந்ததாகக் கூறுப்படுகிறது. அப்படி என்றாற் பொருள் என்ன? உபுல்வன், கடல் தெய்வம் என்பது தானே பொருள். உபுல்வன் தெய்வத்தை கிஹிராளி உபுல்வன் என்பவர் சிங்களவர். கிஹிராளி என்றால் செஞ்சந்தன மரம் என்பது பொருள். செஞ் சந்தன மரத்தினால் செய்யப்பட்ட உபுல்வன் (வருணன்) உருவம் கடலில் மிதந்து வந்து தேவுந்தர நகரத்துக் கடற்கரையில் ஒதுங்கியதாகவும் அதனை எடுத்துவந்து கோயிலில் வைத்து வழிபாடு செய்ததாகவும் கூறுவர்.

இலங்கைத் தீவின் தென்மேற்குப் பகுதியிலும் கடற்கரை யோரத்தில் வருணனுக்கு ஒரு கோயில் இருந்ததாகத் தெரிகிறது. அக் கோயிலில் எழுந்தருளியிருந்த தெய்வத்திற்குச் சிங்களவர் தெவொல் என்று பெயர் கூறுவர். தெவொல் என்பது உதகபால என்னும் சொல்லின் திரிபு என்பர். உதக, தக, உத என்னும் சிங்களச் சொற்களுக்குத் தண்ணீர் என்பது பொருள் நீர்க்கடவுள் என்னும் பொருள் உள்ள தகபால என்னும் சிங்களச் சொல் தகபல என்றாகி, பிறகு தகபல என்பது தபவல் என்றாகி, பின்னர் தயவல என்பது தெவல என்றாகி, தெவல என்பது தெவொல் என்றாயிற்று என்று கூறுவர் சிங்கள அறிஞரான டாக்டர் S. பாணவிதன அவர்கள். எனவே தெவொல் என்னும் பெயர் உதக பாலனாகிய வருணனைக் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை.

தெவொல் தெய்வம் இலங்கைக்கு வந்த வரலாறு கூறப்படுகிறது. அது என்னவென்றால்: தமிழ்நாட்டுக் கப்பல் வாணிகன் ஒருவன் கடலிற் சென்றுகொண்டிருந்தபோது, அவனுடைய மரக்கலம் உடைந்து, கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தான். அவனுடைய அல்லலைக் கண்ட கடற்காவல் தெய்வமாகிய மணிமேகலை (இது பௌத்த