உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

உலகப்புகழ் பெற்ற துறைமுகமாகவும் இருந்தது. அத்துறைமுகத்தில் தமிழர், யவனர், அராபியர், சீனர் முதலியோரின் வாணிகக் கப்பல்கள் தங்கின. இந்நகரத்திலிருந்த உபுல்வன் (வருணன்) கோயில் சீனநாடு வரையிலும் புகழ்பெற்றிருந்தது. (இக்காலத்தில் உலகப்புகழ் பெற்றுள்ள கொழும்பு துறைமுகம் அக்காலத்தில் இல்லை. இது பிற்காலத்தில் போர்ச்சு கீசியரால் உண்டாக்கப்பட்டது.)

கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே உபுல்வன், விஷ்ணு வாக மாற்றப்பட்டான். உபுல்வன் எப்படி விஷ்ணுவாக மாற்றப்பட்டான்? உபுல்வன் என்னும் சிக்ஙளச் சொல்லை உப்பலவண்ணன் என்று சிங்க மொழியிலும், உத்பல வர்ணன் என்று சம்ஸ்கிருத மொழியிலும் மாற்றினார்கள் என்று முன்னர் சொன்னோம். இவ்வாறு மாற்றப்பட்ட இச் சொல், நீலத்தாமரை நிறமுள்ளவன் அல்லது நீல நிறமுள்ளவன் என்று பொருள் கொண்டது. உப்பலம் அல்லது உத்பலம் என்றால் நீலத் தாமரைக்குப் பெயர். வண்ணம் என்றாலும் வர்ணம் என்றாலும் நீலத் தாமரைக்குப் பெயர். வண்ணம் என்றாலும் வர்ணம் என்றாலும் நிறம் என்பது பொருள். எனவே உத்பல வண்ணன் என்பது நீலத்தாமரைப்பூ போன்ற நிறமுள்ளவன் என்று பொருள் கொண்டு, அது நீலநிறமுடைய விஷ்ணுவைக் குறிக்கும் என்று கற்பிக்கப்பட்டது. இவ்வாறு உபுல்வன் என்னும் வருணன் விஷ்ணுவாக மாற்றப்பட்டான். உபுல்வன் கோயில், விஷ்ணு (திருமால்) கோயிலாகக் கருதப்பட்டது. ஆனால், வழிபாட்டு முறையில், வருணனுக்குரிய வழிபாடும் நடைபெற்றுவந்தது. இவ்வாறு, பிற்காலத்திலே உபுல்வன் கோயிலில் வருணன் வழிபாடும் திருமால் வழிபாடும் நிகழ்ந்தன. பின்னர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில், போர்ச்சு கீசியர் இலங்கையை ஆட்சிசெய்த காலத்தில் தொமெ-டி-ஸௌஸா என்னும் சேனைத் தலைவன் தனது போர் வீரர்களை அழைத்துக் கொண்டுபோய் (கி.பி. 1558-ஆம் ஆண்டு) இந்தக்கோயிலை இடித்துத் தகர்த்து அழித்துப்போட்டான். அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இந்தக் கோயில் இவ்வாறு அழிக்கப்பட்டது. பிறகு, கண்டி நகரத்தில் இருந்து அரசாண்ட இராஜ சிம்மன் (இரண்டாவன்) என்னும் சிங்கள அரசன் கி.பி. (1635-87) அந்தக் கோயில் இருந்த இடத்தில் விஷ்ணு வுக்கு ஒரு கோயில் கட்டினான்.

பிற்காலத்திலே, கடல் தெய்வமாகிய உபுல்வனை விஷ்ணுவுடன் பொருத்தி அக்கடவுளைத் திருமால் எனக் கற்பித்துவிட்டனர் என்று கூறினோம். உத்பலவர்ணன் என்றால் நீலத்தாமரை நிறம் என்பது