உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.

FT.

86

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -6

டத்திலே) தங்கிவிட்டபடியினாலே விஷ்ணு, ஸ்ரீயைப் பிரிந்த வருத்தத்தினால் கருநிறமானான். ஆனால், பிரமன் சரசு வதியைப் பிரிந்ததனால் வருத்தம் அடையாமல் வெண்ணிற மாகவே இருந்தான் என்பது ஷெ செய்யுள் கூறும் கருத்து ஆகும். இதிலிருந்து உபுல்வன் வேறு விஷ்ணு வேறு என்பது தெரிகிறது. உபுல்வனும் (வருணனும்) உத்பலவர்ணனும் (விஷ்ணுவும்) ஒருவராகவே இருந்தால், விஷ்ணு தன் மனைவியாகிய ஸ்ரீயைப் பிரிந்து வருந்தினான் என்று கூறுவதில் பொருள் இல்லை அன்றோ? இதனால் உத்பலவர்ணனும் உபுல்வனும் விஷ்ணு வாகிய ஒருவரையே குறிக்கும் என்பது தவறாகிறது. இதனால் உபுல்வனாகிய வருணன் வேறு, உத்பலவர்ணனாகிய விஷ்ணு வேறு என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது.

கோகில சந்தேசம் என்பதும் ஒரு சிங்கள நூல். இது குயில்விடு தூது. இதுவும், மேலே கூறப்பட்ட திசர சந்தேசத்தைப் போலவே, தேவுந்தர நகரத்தில் கோயில் கொண்டிருந்த உபுல்வனை (வருணனைப்) புகழ்கிறது. இந்நூலின் 21-ஆம் செய்யுள், உபுல்வன் விஷ்ணுவுக்கு நிகரானவன் என்று கூறுகிறது. உபுல் வனும் (வருணனும்) உத்பலவர்ணனும் (விஷ்ணுவும்) ஒருவரே என்றால் இந்த உவமை எப்படிப் பொருந்தும்? உபுல்வன், விஷ்ணுவுக்கு நிகரானவன் என்று கூறுப்படுகிறபடியினாலே, உபுல்வன் வேறு உத்பலவர்ணன் வேறு என்பதும் இருவரும் ஒருவர் அல்லர் என்பதும் தெரிகின்றன.

மயூர சந்தேசம் என்பதும் ஒரு சிங்கள நூல். இது மயில் விடு தூது. இதுவும் உபுல்வனைப் பற்றிய நூல். இந்நூலின் 151-ஆம் செய்யுள், தேவுந்தர நகரத்தில் எழுந்தருளியிருந்த உபுல்வனுக்கு இரண்டு கைகள் இருந்தன என்று கூறுகிறது. உபுல்வன், உத்பல வர்ணனாக (விஷ்ணுவாக) இருந்தால் அவருக்கு நான்கு திருக் கைகள் கூறப்படவேண்டும். விஷ்ணுவுக்குச் சங்கு சக்கரம் ஏந்திய இரண்டு கைகளும் வாத அபயம் அளிக்கும் இரண்டு கைகளும் ஆக நான்கு கைகள் உண்டல்லவா? இரண்டு கைகளைக் கூறுகின்றபடியினால், உபுல்வன் வருணனே, விஷ்ணு அல்லன் என்பது விளங்குகிறது.