உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சிலப்பதிகார ஆய்வுரை*

காவிரி - காவேரி

"சோழநாடு சோறுடைத்து” என்பது பழமொழி. சொல்லிலிருந்து உண்டாவது சோறு. சொல் என்றால் நெல் என்பது பொருள். சோழநாடு, தமிழ்நாட்டின் நெற் களஞ்சியம். சோழ நாட்டை நெற்களஞ்சிய மாக்குவதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது அந்நாட்டில் பாய்கிற காவிரி ஆறு. காவிரி ஆறு தமிழ்நாட்டின் புண்ணியநதி என்பதைத் தமிழ்நூல்கள் கூறுகின்றன. சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய இரண்டு காவியங்களும் காவிரி ஆற்றின் சிறப்பைக் கூறுகின்றன. முற் காலத்து நூல்களும் பிற்காலத்து நூல்களும் காவிரி ஆற்றைக் காவிரி ஆறு என்றே கூறுகின்றன. காவேரி என்பது கொச்சை வழக்குச் சொல். இது பேச்சுவழக்கில் மட்டும் வழங்கப்படுகிறது. காவிரி என்பதுதான் நூல் வழக்குச் சொல். பழைய நூல்களிலும் புதிய நூல்களிலும் காவிரி என்னும் சொல்லே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சிலப்பதிகாரக் காவியத்தில் மட்டும் காவிரி என்றும் காவேரி என்றும் இரண்டு வகையாக இந்தப் பெயர் கூறப்படுகிறது. இளங்கோவடிகள் தம்முடைய சிலப்பதிகாரக் காவியத்திலே கானல்வரியில் மட்டும் காவேரி என்னுஞ் சொல்லை வழங்குகிறார். மற்ற இயற்றமிழ்ப் பகுதி களில் காவிரி என்னுஞ் சொல்லை வழங்குகிறார். தமிழ் மொழியின் ஆதி காவியத்திலே இளங்கோவடிகள் ஏன் இவ்விரண்டு சொற்களை வழங்கி யுள்ளார்? இதன் காரணம் என்ன? இதற்குக் காரணங் கண்டுபிடிப் பதற்கு முன்னம், இந்தச் சொற்கள் சிலப்பதிகாரத்தில் எந்தெந்த இடங்களில் வந்துள்ளன என்பதைச் தெரிந்து கொள்வோம். முதலில் காவிரி என்னும் சொல் வந்துள்ள இடங்களைப் பார்போம்.

'தண்ணுறுங் காவிரித் தாதுமலி பெருந்துறை.

(இந்திர விழா, 165.)

கடற்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாறு. (கடலாடு,163)

  • செந்தமிழ்ச்செல்வி. சிலம்பு 46:2; 1971.