உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

97

பெரிய கப்பல்

மகள் அல்லரா? (மாநாய்கன் என்பது மா+நாவிகன் வாணிகன் என்னும் பொருள் உள்ள சொல்.) மாசாத்துவனின் மருமகள் அல்லரா? (மாசாத்துவன் என்பது மா + சாத்துவன் சாத்துவன் - பெரிய வணிகச் சாத்தின் தலைவன் என்பது பொருள்.) ஆகவே, கண்ணகியார் கையில் அணிந்திருந்த வளை விலையுயர்ந்த வலம்புரிச் சங்குவளை என்பதில் ஐயமில்லை.

கண்ணகியின் காற்சிலம்பு

று

பழங்காலத் தமிழக மகளிர் கால்களில் சிலம்பு என்னும் அணியை அணிந்திருந்தார்கள். திருமணம் ஆவதற்கு முன்பு சிலம்பைக் கழிப்பது அக்காலத்து வழக்கமாக இருந்தது. அது, 'சிலம்பு கழி நோன்பு' என்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாகத் தெரிகிறது. சிலம்பு, மகளிரின் சொந்தச் சொத்தாகக் கருதப்பட்டது. அதனை மகளிர் அருமையாகப் போற்றிவைத்தனர். செல்வந்தர் வீட்டுப் பெண்களும் அரச குடும்பத்து மகளிரும் பொன்னாற்செய்த சிலம்புகளை அணிந்திருந்தனர். சிலம் பினுள் பரல்கற்களை இடுவது வழக்கம். அரசர்களும் செல்வர்களும் சிலம்பினுள்ளே முத்துக்களையும் மாணிக்கங்களையும் பரல்களாக இட்டு வைத்தார்கள். அரசு கட்டிலில் துஞ்சிய ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனுடைய அரசி பாண்டிமாதேவியாரின் பொற் சிலம்பினுள்ளே கொற்கைக் குடாக்கடலில் கிடைத்த முத்துக்களைப் பரல்களாக இட்டிருந்தனர் என்று சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம். (வழக்குரை காதை) பெருங் கப்பல் வாணிகனான மாநாயகன் (மா நாவிகன். நாவாய் - கப்பல்) மகளான கண்ணகியாரின் பொற்சிலம்பில் மாணிக்கக்கற்கள் பரற்கற்களாக இடப்பட்டிருந்தன. இதை வழக்குரை காதையிலிருந்து அறிகிறோம்.

எனத்,

66

'நற்றிறம் படராக் கொற்கை வேந்தே!

என்காற் பொற்சிலம்பு மணியுடை யரியே,

தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி,

யாமுடைச் சிலம்பு முத்துடை யரியே.”(சிலப். 20 : 66-69)

கைவளையும் காற்சிலம்பும் அக்காலத்து மகளிர்க்கு இன்றி யமையாத அணிகலன்களாகக் கருதப்பட்டன. இவ்விரு அணிகலன் களையும் அக்காலத்து மகளிர் அருமையாகப் போற்றிவைத்தனர்.