உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள்

-

சமணம்

107

இவ்விடத்தில், பாடசாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் வழங்குவது நினைவுகூரத்தக்கது. பள்ளி என்பதற்குச் சமண முனிவர் வாழும பள்ளி என்பது பொருள். சமண முனிவர், நாட்டுச் சிறுவர் களைத் தம் பள்ளிகளில் உள்ள கூடத்தில் இருக்கச் செய்து அவர்களுக்கு எழுத்துக்களையும் நூல்களையும் படிப்பித்து வந்தனர். இதனால் பாட சாலைக்கும் பள்ளிக்கூடம் என்னும் பெயர் ஏற்பட்டது. சமணர் தம் பள்ளிக்கூடங்களில், சிறுவர்களுக்கு எழுத்துக் கற்பிக்கும் போது சித்தர் வணக்கம் கூறிய பிறகு கற்பிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த வழக்கந்தான், இக்காலத்திலும் மற்றவர்களாலும் வழக்கத்தில் கைக்கொள்ளப்பட்டது. எனவே, பள்ளிக்கூடம் என்னும் பெயரும், சித்த வணக்க முறையும் சமணரிடமிருந்து பெற்றுக் கொண்டவை என்பது வெளிப்படை.

அடிக்குறிப்புகள்

1. இந்துமதம் என்று இங்குக் கூறுவது சைவ வைணவ மதங்களை. 2. இந்துக்களால் அரக்கர் என்று கூறப்படுவோர், சமண நூல்களில் வித்தியாதரர் என்று கூறப்படுகின்றனர்.

3. ஸ்ரீபுராணம்; நூன்முகம், பக்கம் xxxii.

4. P. 116, Adisvara Caritrs. Trisasti Salaka Purusa Car tra. Vol I. Caekwad's Oriental Series No. LI.

5. 34ஆம் செய்யுள்

6. காளிக்குக் கூளி கூறியது. 209.

7. கி.பி. 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த பரமேஸ்வர வர்மன் என்னும் பல்லவ அரசன், சைவ சமயத்தவனாய் எருதுக் கொடியைப் பெற்றிருந்தான். இவனது எருதுக் கொடியைச் சில புராணங்கள் ‘தர்மத்துவஜம்' என்று கூறுவதும் ஈண்டுக் கருதத் தக்கது. இவன் பரம்பரையினர் யாவரும் ரிஷபக் கொடியைக் கொண்டிருந்தனர்.

8. P. 5.6 Mys. Arch. Annual Rept. 1925.

9. 371 of 1911. No. 1358 S. (Texts) Vol. VII.P. 494.

10. S.I.I. Vol.V.

11. ஸ்ரீபுராணம்; நூன்முகம், பக்கம் XXXI.