உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் சமணம்

-

135

செங்கடம் என்றும் பெயர்) ஒரு பகுதியாக உள்ளது. இவ்விடத்தில் பல சமண உருவங்கள் காணப்படுகின்றன.108

சிவாயம் :

குளித்தலை தாலுகா குளித்தலைக்குத் தெற்கே 5 மைல். இங்கு ஒரு சமண உருவம் காணப்படுகிறது.

சுண்டைக்காப்பறை:

109

110

குளித்தலைக்குத் தெற்கே 3 மைல். இக் கிராமத்தில் ஒரு பாறையின்மேல் ஒரு சமணத் திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது.* வெட்டுவாந்தலை :

குளித்தலைக்கு வடமேற்கே 9 மைல். இங்கே மூன்று சமணத் திருமேனிகள் காணப்படுகின்றன.

அம்மா சத்திரம் :

க்

111

6. புதுக்கோட்டை

அம்மா சத்திரத்திற்கு மேற்கே பள்ளிக்குளம் என்னும் ஒரு குளம் உண்டு. பள்ளிக்குளம் என்றால், சமணப்பள்ளிக்குரிய குளம் என்பது பொருள். இக் குளத்திற்கு மேற்கே 25 அடி உயரமுள்ள கற்பாறை மீது அருகக்கடவுளின் திருவுருவம் முக்குடையுட ன் காணப்படுகிறது. இங்கு இரண்டு கல்வெட்டுச் சாசனங்கள் உள்ளன. இவற்றிலிருந்து இக் கற்பாறைக்குத் திருப்பள்ளி மலை என்னும் பெயர் உண்டென்று தெரிகிறது. இத் திருப்பள்ளி மலைக்குரிய குளந்தான் மேற்கூறிய பள்ளிக்குளம். இப் பள்ளிக்குளத்துக்கருகில் வேறு சில சமணத் திருவுருவங்கள் சிதைந்து காணப்படுகின்றன.

ஆளுருட்டி மலை :

அம்மா சத்திரத்துக்கு அருகில் உள்ளது. இங்குள்ள குன்றின்மேல் இரண்டு சமணத் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இம் மலையின் குடகுக்கு முன்பாகச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது ச் சாசனத்தினால், இம் மலைக்குத் திருமான் மலை என்னும் பெயர் உண்டென்பது அறியப்படுகிறது. சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டிய தேவர்க்கு ... குலோத்துங்க சோழபட்டணத்து பள்ளிச் சந்த. உடையார் கனகசந்திர பண்டிதர் மாணாக்கர் தன்மதேவ ஆசாரியார்