உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

மணிகளை அழித்ததாகக் கூறப்படுவது உருவகமாகும். இக் கதைக்கு உட்பொருள் உண்டு. அஃதாவது, சமண பௌத்த சமயங்களுடன் சைவ வைணவ சமயங்கள் சமயப்போர் இட்ட காலத்தில் சைவ சமயமும் வைணவ சமயமும் சேர்ந்து சமண பௌத்த மதங்களை அழித்த செய்தியைத் தான் முப்புரமெரித்த கதை கூறுகிறது, இதற்கு உதாரணங் காட்டி விளக்குவோம்.

-

""

மதுரையை யடுத்த யானைமலையில் பண்டைக் காலத்தில் சமண முனிவர்கள் இருந்தார்கள். திருஞானசம்பந்தரும் "யானை மரமலையாதியாய இடங்களில் சமணர் இருந்தார்கள் என்று திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார். இந்த மலையின் உருவ அமைப்பு, பெரிய யானையொன்று கால்களை நீட்டிப் படுத் திருப்பது போன்று இருப்பதனால் யானைமலை என்று இதற்குப் பெயர் வந்தது. இந்த மலையில் சமண முனிவர்கள் இருந்தார்கள் என்பதற்குச் சான்றாக இங்குள்ள பாறையில் அஜ்ஜநந்தி என்னும் சமண முனிவரின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். ஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு இந்த மலையிலே வைணவர்கள் நரசிங்க மூர்த்தியை அமைத்தார்கள். கி.பி. 770இல் மாரன்காரி என்னும் வைணவர் இவர் பாண்டியனுடைய அமைச்சர், யானைமலைக் குகையிலே நரசிங்கப் பெருமாளை அமைத்தார் என்று இங்குள்ள கல் வெட்டுச் சாசனம் கூறுகிறது. சமணக் கோயில்களையும், பௌத்தக் கோயில்களையும் வைணவர் கைப்பற்றும் போது முதலில் நரசிங்க மூர்த்தியை அமைப்பது வழக்கம். இந்த முறைப்படி சமணர் மலை யாகிய யானை மலையைக் கைப்பற்றுவதற்கு வைணவர் நரசிங்க மூர்த்தியை அமைத்தார்கள். இதற்குக் சைவர்களும் உடன்பட்டிருந்த தோடு, ஒரு புராணக் கதையையும் கற்பித்துக் கொண்டார்கள். அஃது எந்தக் கதை என்றால், திருவிளையாடற் புராணத்தில் யானை எய்த படலம் என்னும் கதை. இந்தக் கதை, சமணருடைய யானையைச் சோமசுந்தரப் பெருமான் நரசிங்க அம்பு எய்து கொன்றார் என்று உருவகப்படுத்திக் கூறுகிறது.

“இங்கித நெடுங்கோ தண்டம்

இடங்கையில் எடுத்து நார

சிங்கவெங் கணை தொட் டாகந்

திருகமுன் னிடந்தாள் செல்ல