உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் சமணம்

-

ஏழுகூற்றிருக்கை

ஒருபொருட் கிருதுணி புரைத்தனை ஒருகால் இருபிறப் பாளர்க்கு மூவமிழ் தாக்கி ஈரறம் பயந்த ஓரருள் ஆழியை,

இருமலர் நெடுங்கண் அரிவையர் தம்மொடு மூவகை யுலகில் நால்வகைத் தேவரும் மும்மையின் இறைஞ்சும் ஈரடி ஒருவனை, இருவினை பிரித்து மூவெயில் முருக்கி நாற்கதி தவிர்த்த வைங்கதித் தலைவ, நான்மறை யாள மும்மதிற் கிழவ

இருகுணம் ஒருமையில் தெரிவுறக் கிளந்த இருசுடர் மருட்டும் முக்குடைச் செல்வ. நால்வகை வருணமும் ஐவகைக் குலனும் ஆறறி மாந்தர்க் கறிவுற வகுத்தனை. ஐந்நிற நறுமலர் முன்னுற ஏந்தி

நாற்பெரும் படையொடு மும்முறை வலங்கொண் டிருகையுங் கூப்பி ஒருமையின் வணங்கி

அரசர் நெருக்குறூஉம் முரசுமுழங்கு முற்றத்து இருநிதிப் பிறங்கலோ டிமையவர் சொரிதலின் முருகயர் வுயிர்க்கும் மும்மலர் மாரியை, நால்வகை யனந்தமும் நயந்தனை தேவரின் ஐவகை விழைவு மையற வெய்திணை ஆறுபுரி நிலையும் தேறினர்க் கியம்பினை எழுநயம் விரித்த திருமறு மார்பினை

அறுபொருள் அறைந்தனை ஐம்பதம் அருளினை நான்குநின் முகமே மூன்றுநின் கண்ணே இரண்டுநின் கவரி ஒன்றுநின் அசோகே

ஒரு தன்மையை இருதிறத்தினை

முக்குணத்தினை நால்வகையினை

ஐம்பதத்தினை அறுபிறவியை

ஏழயாதவத்தினை

அரிமருவிய மணியணையினை

வளர்கதிரொளி மண்டலத்தினை

அதனால்,

211