உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

நிலைவெளி விருத்தம்

ஏதங்கள் நீங்க எழிலிளம் பிண்டிக்கீழ்ப் - புறாவே

வேதங்கள் நான்கும் விரித்தான் விரைமலர்மேல் - புறாவே பாதம் பணிந்து பரவுதும் பல்காலும் - புறாவே.

ஆசிரிய விருத்தம்

கங்கணக்கைப் பைந்தார்க் கனைகழற்காற்

கருவரைபோல் நீண்டமார்பிற் காமர்கோலம் பொங்கிய சாமரை பொற்பவேந்திப்

புடைநின் றியக்கர்கள் போற்றிவீசச்

சிங்கஞ்சுமந் துயர்ந்தவா சனத்தின்மேற் சிவகதிக்கு வேந்தாகித் தேவர்ஏத்த

அங்கம்பயந்த அறிவனாகிய அறப்படைமூன்

றாய்ந்தானடி யடைவா மன்றே.

கொங்கு தங்கு கோதை யோதி மாத ரோடு

கூடி நீடும் ஓடை நெற்றி

வெங்கண் யானை வேந்தர் போந்து வேதகீத

நாத வென்று நின்று தாழ

அங்க பூர்வம் ஆதி யாய ஆதி நூலின்

நீதி யோதும் ஆதி யாயா

செங்கண் மாலைக் காலை மாலை சேர்நர் சேர்வர்

சோதி சேர்ந்த சித்தி தானே.

ஆசிரிய விருத்தம்

சோதி மண்டலம் தோன்றுவ துளதேல், சொரியும் மாமலர் தூமழை யுளதேல், காதிவென்றதோர் காட்சியும் உளதேல், கவரி மாருதம் கால்வன உளவேல்,

பாத பங்கயம் சேர்நரும் உளரேல், பரம கீதமும் பாடுநர் உளரேல்,

ஆதி மாதவர் தாமரு குளரேல்,

(30)

(31)

(32)

அவரை யேதெரிந் தாட்படு மனனே.

33