உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

வொருங்குலகி னூற்கற்ற வோத முந்நீ

ரொளிவளர வறம்பகர்ந்த வுரவோன் பாதம்

கருங்கயற்கட் காரிகையார் காத னீக்கிக்

கைதொழுதாற் கையகலுங் கவ்வை தானே.

(39)

அனவரத மமர ரரிவையரோ டணுகி யகனமரு முவகை யதுவிதியி னவர வணிதிகழ வருவ ரொருபாற் கனவரையொ டிகலு மகலமொளி கலவு கரகமல நிலவு கனகமுடி கவினு கழலரசர் துழனி யொருபால் தனவரத நளின சரணநனி பரவு தகவுடைய முனிக

டரணிதொழ வழுவி றருமநெறி மொழிவ ரொருபாற் சினவரன பெருமை தெரியினிவை யவன திருவிரவு கிளவி தெனிரு மொழி யளவு சிவபுரம தடைத றிடனே. (40) இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியி னெதிர்ந்த தானையை யிலங்கு மாழியின் விலக்கியோள்

முடங்கு வாலுளை மடங்கன் மீமிசை முனிந்து சென்றுடன் முரண்ட ராசனை முருக்கியோள்

வடங்கொண் மென்முலை நுடங்கு நுண்ணிடை மடந்தை சுந்தர

வளங்கொள் பூமழை மிகிழ்ந்தகோன்

தடங்கொள் தாமரை யிடங்கொள் சேவடி தலைக்கு வைப்பவர்

தமக்கு வெந்துயர் தவிர்க்குமே.

ஒருமன மாந்தர் மூவகை யுலகி

னிருமனம் பட்டு நாற்கதி யுழல்வோரே இருமனம் பட்டு நாற்கதி யுழல்வோர் ஒருமன மாகி மூன்றுதிரி விலரே

மூன்று திரிவறிந்து முதலொன் றறிந்தோர் ஆன்ற நாற்கதி யிரண்டன் வரவிலரே

(41)

யான்ற நாற்கதி யிரண்டன் வரவுடையோர்

மேற்செயன் மூன்றி னொன்றுணர்ந் தோரே.

(42)

பிணியார் பிறவிக் கடலுட் பிறவா வகைநா மறியப்

பணியாய் மணியா ரணைமேற் பணியா வொருமூ வுலகுங் கணியா துணருங் கவினார் கலைமா மடவாள் கணவா வணியார் கமலத் தலரா சனனே யறவா ழியனே. (43)